தோல்வி பயத்த காட்டிடாங்க பரமா.. கதறும் நிரூப்.. சவுண்டுவிட்ட அண்ணாச்சி.. ஒரு ரவுண்டப் !

சென்னை : பிக் பாஸ் வீட்டில் நேற்று தலைவர் பதவிக்கான டாஸ்கின் போது ரணகளமே நடந்து வீடே இரண்டானது.

நிரூப் பார்ப்பதற்குதான் அப்படி ஆனால், உண்மையில் குழந்தை மாதிரி என்று சொல்லிக்கொண்டு இருந்த அண்ணாச்சி, நேற்று நிரூப்பை சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்தார்.

அப்படி பிக் பாஸ் வீட்டில் நேற்று என்னத்தான் ஆச்சுனு ஒரு குட்டி ரவுண்டப் பார்க்கலாமா...

அவ்வளவு பாசம்

அவ்வளவு பாசம்

பிக் நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே நிரூப், அண்ணாச்சி இருவரும் கூடி கூடி பேசுவார்கள். அண்ணாச்சி பேசுவதற்கு மறுபேச்சே இல்லாமல் ஆமாம் சாமி போட்டு வந்தார் நிரூப். நாமினேஷனில் கூட இதுவரை அண்ணாச்சியின் பெயரை நிரூப் சொன்னது இல்லை, அதே போல அண்ணாச்சியும் நிரூப்பின் பெயரை நாமினேட் செய்தது இல்லை... அவ்வளவு பாசம்...

கேப்டன்

கேப்டன்

இந்நிலையில், நேற்று பிக் பாஸ் வீட்டில் தலைவர் பதவிக்கான டாஸ்க் நடைபெற்றது. இதில், போர்டிங் ஸ்கூல் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்ட சிபி, அபிஷேக் மற்றும் அண்ணாச்சி போட்டியிட்டனர். இந்த போட்டியில் அண்ணாச்சி வெற்று பெற்று தலைவர் ஆனார். ஆனால், நிரூப் தன்னிடம் உள்ள காயினை பயன்படுத்தி அண்ணாச்சியின் தலைவர் பதவியை தட்டிப்பறித்து நிரூப் தலைவர் ஆனார்.

தோல்வி பயம்

தோல்வி பயம்

அண்ணாச்சி இதுவரை பிக் பாஸ் வீட்டின் தலைவராக இருந்தது இல்லை. இதனால், அவர் மிகவும் கஷ்டப்பட்டு அந்த போட்டியில் வெற்றி பெற்றார். நாம் வெற்றி பெற்றால் நிரூப் காயினை பயன்படுத்த மாட்டார், விட்டு கொடுத்து விடுவார் என்று அண்ணாச்சி நினைத்து இருந்தார். ஆனால், நிரூப் யாரா இருந்தால் எனக்கென்ன என்பது போல நாணயத்தை பயன்படுத்தி தலைவர் ஆனார். இதனால், கடுப்பான அண்ணாச்சி, நிரூப் உனக்கு தோல்வி பயம் வந்துடுச்சி அதான் காயினை பயன்படுத்தின என்று, நிரூப்பை கிண்டல் அடித்தார்.

ஆர்டர் போட்ட நிரூப்

ஆர்டர் போட்ட நிரூப்

இதையடுத்து, நிரூப் ஹவுஸ்மேட்களை 3 பேர் கொண்ட 4 டீமாக பிரித்தார். ஒவ்வொரு டீமும் அன்றாட வீட்டு வேலைகளை மாற்றி மாற்றி செய்ய வேண்டும் என புதிய ரூலை போட்டார். நிரூப்பின் புதிய ரூலால் கடுப்பான அண்ணாச்சி, ஏதாவது ஒருவேலை கொடுத்தா செய்வேன், எல்லா வேலையும் கொடுத்தா என்னால செய்ய முடியாது என்று கூற, நான் கேப்டன் நான் என்ன வேலை கொடுத்தாலும் நீங்க செய்துதான் ஆக வேண்டும் என்று நிரூப் ஆர்டர் போட்டார்.

சவுண்டுவிட்ட அண்ணாச்சி

சவுண்டுவிட்ட அண்ணாச்சி

நிரூப்பின் மிதமிஞ்சிய பேச்சால் கடுப்பான அண்ணாச்சி, நீ சொல்றதை எல்லாம் என்னால பண்ண முடியாது என்ன பண்ணுவ... உன்னால பண்ண முடிஞ்சத பண்ணிக்கோ என்று வீடே அலறும்படி ஒரு சவுண்டுவிட்டார்.

மிஸ் யூஸ் பண்ணுவாங்க

மிஸ் யூஸ் பண்ணுவாங்க

இமான், அபிஷேக் , பிரியங்கா ஆகியோருக்கு கூடுதல் அதிகாரத்தை கொடுத்து மற்றொரு புது ரூலை போட்டார் நிரூப். ஆனால் போட்டியாளர்கள் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை இதனால் வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் பிரியங்கா, அபிஷேக்கிற்கு நீ கூடுதல் பவர் கொடுக்குற அவங்க அதை மிஸ் யூஸ் பண்ணா என்ன பண்றது இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக கூறினார் அண்ணாச்சி. இதனால், நிரூப்பின் இந்த யோசனை கைவிடப்பட்டது.

மீண்டும் சண்டை

மீண்டும் சண்டை

இதையடுத்து, பிரியங்கா, அண்ணாச்சியிடம் நானும், அபிஷேக்கும் அப்படி என்ன மிஸ் யூஸ் பண்ணிட்டோம் என்று கேட்டு அண்ணாச்சியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். வீட்டில் பல நேரம் வேலை செய்யாமல் ஓபி அடித்தது நீங்க தான் கூறுகிறார். இதனால் வீட்டில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

நாமினேஷன்

நாமினேஷன்

இதையடுத்து, நடைபெற்ற அபினேஷனில், சஞ்சீவ், அமீர் மற்றும் நிரூப்பை தவிர மற்ற 10 போட்டியாளர்களின் பெயரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல அபிநய் பெயர் இந்த வாரமும் நாமினேஷன் லிஸ்டில் உள்ளது.

ரணகளத்திலும் ஒரு குதூகலம்

ரணகளத்திலும் ஒரு குதூகலம்

இப்படி பிக் பாஸ் வீட்டில் பிரச்சினைகள் ஒருபக்கம் போய் கொண்டு இருக்க, ரணகளத்திலும் ஒரு குதூகலம் என்பது போல, புது வரவான அமீர், பாவ்னி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவரை அடித்து அடித்து விளையாடுகிறார். என்னடா நடக்குது இங்கே என நெட்டிசன்ஸ் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X