எல்லோர் கண்ணும் இந்த வீடு மேல தான்... ஆர்வத்தை தூண்டும் பிக்பாஸ் ப்ரோமோ
சென்னை : ஆர்வத்தை தூண்டி, அனைவரையும் பரபரக்க வைக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் துவக்க விழா இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. ஐந்து மணி நேர நிகழ்ச்சியாக நடத்தப்பட உள்ள இந்த நிகழ்ச்சி பற்றி தொடர்ந்து ப்ரோமோக்கள் வெளியிட்டு அசத்தி வருகிறது விஜய் டிவி.

கமல் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற தகவல் ஒரு புறம் பரபரப்பை கூட்டி வரும் நிலையில், மற்றொரு புறம் எப்போது நிகழ்ச்சியை துவக்குவார்கள் என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி, ஆரவாரப்பட வைத்துள்ளது விஜய் டிவி.,யின் ப்ரோமோக்கள்.
Recommended Video
பல விதங்களில், விதவிதமான டயலாக்குகளுடன் கமல் தோன்றும் இந்த ப்ரோமோக்கள் அனைவரையும் கவர்ந்து, ரசிக்க வைத்துள்ளது. அதைத் தாண்டி, இந்த ப்ரோமோவில் ஏதாவது க்ளூ ஒழித்து வைத்திருப்பார்களோ என பலர் மூளையை கசக்கி யோசிக்க துவங்கி விட்டனர்.
இன்று நிகழ்ச்சி துவங்க உள்ள நிலையில் லேட்டஸ்டாக புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. மேல் வீடு, கீழ் வீடு, எதிர் வீடு என எல்லா வீடும் இப்போ ஒன்னாகிடுச்சு. எல்லோர் கண்ணும் இப்ப இந்த வீட்டு மேல தான். Today grand opening Bigg Boss என கமல் பேசுவதை போல் இந்த ப்ரோமோ அமைக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 போட்டிக்கான துவக்க விழா ஷுட்டிங் நேற்றே நடத்தப்பட்டு விட்டதால், பிக்பாஸில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் பட்டியல் சோஷியல் மீடியாக்களில் கசிய துவங்கி விட்டது. இது வரை 6 பேரின் பெயர்கள் கன்ஃபார்ம் போட்டியாளர்களாக வெளியிடப்பட்டுள்ளது.இந்த முறை 16 போட்டியாளர்களுக்கு பதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்க போவதாக வேறு ஒரு தகவல் சொல்லப்படுகிறது.
இதுவரை வெளியான கன்ஃபார்ம் போட்டியாளர்கள் பட்டியலில் நமீதா மாரிமுத்து, மதுமிதா, கானா இசைவாணி, ராஜு ஜெயமோகன், விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா, அபிஷேக் ராஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதனால் மீதமுள்ள போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
இந்த முறை பிக்பாஸ் விதிகள், பிக்பாஸ் ஒளிபரப்பாகும் நேரம் என அனைத்தும் மாற்றப்பட்டுள்ளதால் வேறு என்னவெல்லாம் மாற்றம் செய்திருப்பார்கள். இந்த முறை எந்த மாதிரியான போட்டிகள் நடத்துவார்கள் என பல விதமாக ரசிகர்கள் மனதில் கேள்விகள் எழுந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











