யக்கா சும்மா கத்தாத… அலார்ட் யக்கோ… அட்வைஸ் கொடுத்த ராஜூவை பாராட்டிய நெட்டிசன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியானது. இதில், ராஜு, எதார்த்தமாக இருக்கிறேன் என்பதற்காக அட்டூழியம் பண்ணாத என்று நேரடியாகவே தாமரைக்கு அறிவுரை கூறியுள்ளார்.
தாமரைக்கு சரியான நேரத்தில் சரியான அட்வைஸ் கொடுத்துள்ளதாக கூறி இணையவாசிகள் அவரை பாராட்டி வருகின்றனர்.
ஸ்ருதி தாமரையின் நாணயத்தை திருடியது முதல் பிக் பாஸ் வீட்டில் தாமரை கொஞ்சம் ஓவரா பேசிவருகிறார்.

நெட்டிசன்ஸ் கருத்து
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோவில், நீ பேசுறத ஓரளவுக்குத்தான் எல்லோராலும் சகித்துக்கொள்ள முடியும். நீ ரொம்ப எதார்த்தமாக இருக்கிறேன் என்பதற்காக அட்டூழியம் பண்ணாத. எல்லாருக்கும் உன்னை பிடிக்கும், ஆனால் இவ என்ன கத்திகிட்டே இருக்கா என தோன்றும். நீ நியாயமாகவே நடந்து இருந்தாலும் வெளியில் இருப்பவர்களுக்கு அது நியாயமாக தெரியாது என ராஜு தாமரைக்கு அறிவுரை கூறியுள்ளார்.

யக்கா அலார்ட்
ராஜு கூறிய அறிவுரை குறித்து ஒரு நெட்டிசன்ஸ் ராஜுவை வெகுவாக பாராட்டி உள்ளார். இதில், யப்பா யாராவது சொன்னீங்களே.. யக்கா இந்த உலகம் நடிக்கிறவங்கள தான் நம்பும்.. விவரமா கத்தவிடறாங்க அலார்ட் ஆகிக்க...யக்கோ.. என பதிவிட்டுள்ளார்.

மூளைக்காரன்
மற்றொரு இணையவாசி யப்பா... இவன் தான்யா மூளைக்காரன் கரைக்டா அட்வைன்ஸ் பண்றான். என பகிர்ந்துள்ளார்.

ஸ்கிரிப்ட் ரைட்டர்
ஒரு நெட்டிசன்ஸ், ராஜூ ஸ்கிரிப்ட் ரைட்டர் என்பதை அப்பப்போம் நிரூபிச்சுகிட்டே இருக்கார். ராஜூ பாய் உங்களுக்குள்ள தூங்குற மிருகத்தை கொஞ்சம் வெளியே விடுங்க. கேம் சுவாரஸ்யம் ஆக வேண்டாமா??? என பகிர்ந்துள்ளார்.

சூப்பர்
மற்றொரு பிக் பாஸ் வெறியன், சும்மா சொல்லக்கூடாது நம்ம எண்ணத்தில் உள்ளதை அப்படியே சொல்லுறான் ராஜூ.... தாமரை கிட்ட.... சூப்பர்... இந்த வாரம் ஓவரா பேசினது தாமரை தான்!!!! என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











