தைரியம் இருந்தால் பிரியங்காவை கேளு... பயந்தாங்கோலி ராஜூ!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் அபிஷேக், நிரூப் , பிரியங்கா மூவரும் இணை பிரியாத நண்பர்களாக இருந்தனர்.
நாணய டாஸ்கின் போது இந்த அன்புக் கூட்டணி உடைத்தது. பிரியங்கா, நிரூப் இருவரும் எலியும் பூனையுமாக மாறினர்.
நேற்று நடைபெற்ற கயிறு டாஸ்க்கின் போது நிரூப்பிடம் பிரியங்கா நிகழ்த்திய வாக்குவாதத்தை ஒருவகையான உளவியல் யுத்தம் என்றே சொல்லலாம். இதிலும் ஜெயித்தது பிரியங்காத்தான்.

அழுது சமாளிப்பார்
பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா சொல்வதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் இருக்கு போல. எந்த விஷயம் என்றாலும் அதில் முதலில் மூக்கை நுழைந்து நான் சொல்வது தான் சரி என வாதிடுபவர் பிரியங்கா. பிரியங்காவின் இந்த செயல் பலருக்கு பிடிக்கவில்லை என்றாலும் , யாரும் பிரியங்காவின் முகத்திற்கு நேராக கேள்வி கேட்டது இல்லை. அப்படி கேள்வி கேட்டாலும் பிரியங்காக அழுதே சமாளித்து விடுவார்.

மோசமான புத்தி
நேற்று கயிறு டாஸ்கில் நிரூப் பிரியங்காவை சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்து விட்டார். உன் வாய்ஸ் கேட்டாலே கடுப்பா இருக்கு என்பதில் தொடங்கி, உனக்கு பிடிக்கவில்லை என்றால், அவங்களை அப்படியே குழியில் தள்ளிடுவா உன் புத்தி கேவலமான புத்தி என்று முகத்திற்கு நேராகவே திட்டி விட்டார் நிரூப்.

நிரூப்பை கார்னர் செய்து
நிரூப்பை எப்படி கார்னர் செய்தால் அவன் கடுப்பாவான் என்பதை தெரிந்து வைத்துள்ள பிரியங்கா அவரை உசுப்பேத்தி, எமோஷ்னல் ஆக்கி டாஸ்கிலிருந்து வெளியேற வைத்துள்ளார் பிரியங்கா. இதில் பரிதாபமாக தோற்றுப் போனது என்னமோ நிரூப்தான்.
Recommended Video

பயந்தாங்கோலி ராஜூ
பிரியங்கா தான் நிரூப்பை தூண்டி விட்டார் என்ற விஷயம் நன்றாகத் தெரிந்த ராஜூ பிரியங்காவை திட்டாமல், நிரூப்பிடம் வந்து, என்னடா நிரூப், குழியில் தள்ளிடுவா... உன் புத்தி கேவலமான புத்தினு பேசுறா என்று நிரூப்பை கேள்வி கேட்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்ஸ், பயந்தாங்கோலி ராஜூ... தைரியம் இருந்தால் இந்த கேள்வியை பிரியங்காவை பார்த்து கேளுங்கள் என்று கருத்து கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











