எதுக்கு இந்த வேலை.. வெளியே போனது மறந்து போச்சா.. அபிஷேக்கை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது ப்ரோமோவில், தாமரை உன்னை ஜால்ரானு சொல்றாங்க இதை எல்லாம் கேட்க எனக்கு கேவலாமா இருக்கு நீ யாருனு காட்டு என்று பிரியங்காவை உசுப்பேத்துவது போல பேசி உள்ளார்.
அபிஷேக்கின் இந்த செயலால் கடுப்பாகிப் போன நெட்டிசன்ஸ், அபிஷேக் வந்ததும் உன் வேலைய காட்டுறியா என்று கேட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் ஓவரா பேசியதால் தான், கடந்த முறை வெளியேற்றப்பட்டார் தற்போது அதேபோலத் பேசத் தொடங்கி உள்ளார்.

நாமினேஷன் பிராசஸ்
பிக் பாஸ் வீட்டில் நேற்று நடைபெற்ற நாமினேஷன் பிராசஸில் பிரியங்கா, நிரூப், இமான் அண்ணாச்சி, பாவ்னி, ஐக்கி பெர்ரி, தாமரை ஆகிய 6 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக பிரியங்கா ஐந்து பேரால் நாமினேட் செய்யப்பட்டார்.

வந்த வேலையை ஆரம்பிச்சிட்டியா
இப்பதான் அபிஷேக் வந்த வேலையை ஆரம்பிச்சிருக்காங்க அடுத்து எல்லா புரோமோல வர ஆரம்பிப்பான். என பதிவிட்டுள்ளார்.

சிவ பூஜையில் கரடி
வெக்கம் கெட்ட போண்டா வாயன், உள்ள போனதும் இல்லாம , தேவையே இல்லாம பிரியங்காவ Trigger பண்றான். இவன் இல்லாம எல்லாரும் நல்லா தான் Game Play பண்ணாங்க , சிவ பூஜையில கரடி பூந்த மாதிரி உள்ள வந்துட்டான். என பதிவிட்டுள்ளார்.

சரியா சொன்ன தாமரை
மற்றொரு நெட்டிசன்ஸ், நீங்க மத்தவங்க கிட்ட காட்ற அன்பு லே சில பேர் தான் உண்மை யா இருக்காங்க விலைக்கி வாங்கிறலாம் .. ஜால்ரா... தாமரை அக்கா கரெக்டா தான் சொல்லிருக்கு. என பதிவிட்டுள்ளார்.

என் தெய்வமே
ஒரு நெட்டிசன்ஸ், அடடா அடாடா அபிஷேக் சாமி, என் தெய்வமே எப்படியது இந்த பிரியங்கா அக்கா வா கையோட கூட்டிடு போ பா.என பதிவிட்டுள்ளார்.

கொளுத்திபோடாதீங்க
மற்றொரு நெட்டிசன்ஸ், பிரியங்காவை விஜய்டிவி வெளியேற்றாது என்பதை அபிஷேக் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்களுக்காக விளையாடுங்கள் அதைவிட்டுவிட்டு கொளுத்தி போட்டு இருந்த பிக் பாஸ் வீட்டை விட்டு அடுத்த வாரம் நீ அவுட் .என பதிவிட்டுள்ளார்,

ஆரம்பிக்காத அபிஷேக்
ஒரு நெட்டிசன்ஸ், அபிஷேக் இப்போ ரீ என்ட்ரி கொடுக்கலனு யாரு அழுதா, பழையபடி வேலையை ஆரம்பிக்கிறான். என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











