நிரூப் போட்ட ஆர்டர்... செய்ய முடியாது என்ன பண்ணுவ… கொந்தளித்த அண்ணாச்சி !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை, நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணியை, ஐக்கி பெர்ரி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கடந்த வார பிக் பாஸ் எபிசோடை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
பிக் பாஸ் வீட்டில் நிரூப் அண்ணாச்சி இதையே காரசாரமான விவாதம் நடந்து வீடே ஒரேகளேபரமாக இருந்தது.

கேப்டன் டாஸ்க்
வாரத்தின் முதல் நாளான இன்று பிக் பாஸ் வீட்டில் தலைவருக்கான போட்டி நடைபெற்றது. இதில், இமான், சிபி, அபிஷேக் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டனர். சிறப்பாக விளையாடி இமான் இந்த வாரத்திற்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஆளுமையை பயன்படுத்தி நிரூப் இமானின் தலைவர் பதவியை தட்டி பறிக்கிறார்.

கடுப்பான அண்ணாச்சி
கஷ்டப்பட்டு கிடைத்த தலைவர் பதவியை பறித்ததால் கடுப்பான இமான் அண்ணாச்சி, சமையல் டீம், கிளினிக் டீம் பிரிக்கும் போதே பிரச்சினை கிளப்பி சண்டை போடத் தொடங்கினார். நீங்க தலைவர் என்பதால் மரியாதை கொடுக்கிறேன். அதற்காக இங்கே போ அந்த வேலையை பாரு, அங்கே போனு ஆர்டர் எல்லாம் போட்டா, எங்களால செய்ய முடியாது என்று முகத்திற்கு நேராக பேசினார்.

ஆர்டர் போட்ட நிரூப்
இதையடுத்து, நிரூப் தன்னுடைய நாணயத்தின் பவரை நான் அபிஷேக்கிடம் தருகிறேன் என்று கூறுகிறார். இதனால், மேலும் கடுப்பான அண்ணாச்சி நீ சொல்றதை எல்லாம் விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார். பிக் பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் நான் தான், நான் என்ன சொல்றேனோ அதை நீங்கள் செய்துதான் ஆகனும் என்று ஆர்டர் போட்டார்.

கோபத்தில் கத்திய அண்ணாச்சி
செய்துதான் ஆகனும்னு ஆர்டர் போட்டா என்னால செய்ய முடியாது, நான் செய்ய மாட்டேன், என்ன செய்வ நீ, உன்னால என்ன செய்ய முடியுமோ அதை செய்துக்கோ என்று உச்ச கட்ட டென்ஷனில் கத்தினார் அண்ணாச்சி இதனால், நிரூப் பிக் பாஸ் அண்ணாச்சி பற்றி பிக்பாஸிடம் புகார் கூறினார்

கூச்சல் குழப்பம்
பிக் பாஸ் வீட்டிற்கு வந்த நாளில் இருந்தே நிரூப் மற்றும் அண்ணாச்சி ஒன்றாக கூட்டுசேர்ந்து பேசி வந்தனர். திடீரென அண்ணாச்சியின் தலைவர் பதவியை நிரூப் பறித்துக்கொண்டதால்,அண்ணாச்சி நிரூப் மீது பயங்கரமான ஆத்திரத்தில் இருக்கிறார். இதனால், பிக் பாஸ் வீட்டில் இன்று கூச்சல் குழப்பம் நிலவியது.


Click it and Unblock the Notifications











