அக்ஷரா மேல பிரியங்காவுக்கு என்ன கடுப்பு… ஏன் அவரை குறிவைக்கிறார் !
சென்னை : பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா மற்றும் அபிஷேக் இருவரின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று சொல்லும் அளவுக்கு இருவரும் அலப்பறை கொடுத்து வருகின்றனர்.
பிரியங்கா வீட்டில் ரூல்ஸ் பேச ஆரம்பித்து, மதுமிதாவுக்கு பேனால என்ன எழுதி காட்டுன என கேட்டு அக்ஷராவிடம் சண்டை போடுகிறார்.
அக்ஷரா இது குறித்து விளக்கம் கொடுத்தும் பிடித்த முயலுக்கு மூனு கால் என பிரியங்கா பேசி வருகிறார். பிக் பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் பிரியங்காவின் அலப்பறை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

சண்டை
குழாய் அடி சண்டைபோட ஆயத்தமான பிரியங்கா, நாங்க சத்தமா பேசி மாட்டிகிறோம். நீ கமுக்கமா எழுதி கமிச்சி நல்ல பெயர் எடுத்துக்கிற.. அது மக்களுக்கு தெரியாது என்று வரிந்து கட்டிக்கொண்டு சண்டை இடுகிறார் பிரியங்கா. உடனே அன்னைக்கு ஒரு நாள் தான் நான் மதுமிதாவுக்கு அப்படி பண்ணேன் அதுக்கூடபோனவாரம் என்கிறார்.

பிரியங்கா அட்ராசிட்டி
ஆனால் பிரியங்காவோ அக்ஷராவிடம்... ஏய்...ரெட் டீ ஷர்ட் என்று நயன்தாரா திரும்ப திரும்ப கேட்பது போல, நீ எழுதி காட்னியா... நீ எழுதி காட்னியா என்று திரும்ப திரும்ப கேட்டு அக்ஷராவுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருந்தார்.
அழுத அக்ஷரா
அக்ஷரா பிரியங்கா பேசியதை நினைத்து அழுகிறார். அப்போது தாமரை மற்றும் சின்னப்பொண்ணு இருவரும் இது விளையாட்டு அவங்க அப்படித்தான் நீ அழாதே என்கின்றனர். நான், கதை சொன்ன போது ராஜு அண்ணா எனக்கு லைக் போட்டார் அப்போ எவ்வளவு பஞ்சாயத்து பண்ணாங்க. அதுக்கு அப்புறம் நான் எப்படி அவங்க கிட்ட ப்ரீயா பேச முடியும், எனக்கு அவங்க கிட்டசண்டை போடவும் வரல என்று கூறி ஓ.... வென்று அழுகிறார்...

நீங்க செய்தது நியாயமா
அக்ஷரா அழுததால் மனமுடைந்த, அக்ஷராவின் தீவிர ரசிகர் ஒருவர், கடந்த வாரம் பிரியங்கா நிரூப் கையில் எதோ எழுதிகாட்டிய படத்தை பகிர்ந்து, எனவே பிரியங்கா கேமரா உணர்வுள்ளவள், கேமரா மற்றும் மைக்கில் சிக்காமல் ஒரு விஷயத்தை ரகசியமாக தெரிவிக்க அவருக்கு தெரியும், அக்ஷராவை இப்படி பேசும் பிரியங்கா நியாயமானவள் அல்ல என பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











