twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக்பாஸ் விதிகளை திக்கி திணறி படிக்கும் ராஜு... காமெடியாக வெளியான ப்ரோமோ

    |

    சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்ட விழாவுடன் துவங்கியது. இடைவிடாது ஐந்து மணி நேரம் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கினார். கானா பாடகி, நாட்டுப்புற பாடகர்கள், நடிகர்கள், நடிகைகள், தொகுப்பாளர் என பல துறைகளை சேர்ந்த 18 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

    அண்ணாத்தே படத்தோட பாட்ட கேக்க ரெடியா மக்களே... இன்னிக்கு ரிலீஸ் அண்ணாத்தே படத்தோட பாட்ட கேக்க ரெடியா மக்களே... இன்னிக்கு ரிலீஸ்

    இன்று முதல் தினமும் இரவு 10 மணிக்கு துவங்கி 11 மணி வரை பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இதற்கான ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. கலக்கலாக, காமெடியாக இருக்கும் முதல் நாள் ப்ரோமோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

    முதல் ப்ரோமோ

    முதல் ப்ரோமோ

    முதல் நாளுக்கான முதல் ப்ரோமோவில், வீட்டின் தலைவரை தேர்வு செய்யும் நிகழ்வு நடக்கிறது. இதற்காக நிரூப், பவ்னி, சின்ன பொண்ணு, ராஜு உள்ளிட்ட 5 பேர் முன் வருகிறார்கள். இவர்களில் ராஜு, பாத்ரூம் கழுவும் டீமுக்கு தலைவராக இருப்பதாக கூறுகிறார். இதனை கலாய்த்து கத்துகிறார் பிரியங்கா. இந்த ப்ரோமோவை பார்ப்பதற்கே ஜாலியாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள்.

    ஏன் இந்த திணறல்

    ஏன் இந்த திணறல்

    இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட இரண்டாவது ப்ரோமோவில், பிக்பாஸ் விதிகளை ஹவுஸ்மேட்களுக்கு திக்கி, திணறி படித்துக் காட்டுகிறார் ராஜு. அதில் மற்ற பகுதிகளில் இருக்கும் கேமிராக்களில் பதிவாகும் காட்சிகள் டிவி.,யில் ஒளிபரப்பு செய்யப்படும். குளியல் அறை மற்றும் கழிவறையில் கேமிரா பொருத்தப்படவில்லை. வீட்டின் சாதனங்களை சேதப்படுத்தவோ...பிக்பாஸ் இதையே தான் நேத்து இருந்து நீங்க ஏழெட்டு முறை சொல்றீங்க என ராஜு வாசிக்கிறார். இதனை கலாய்க்கிறார்கள் பிரியங்கா உள்ளிட்ட பெண் போட்டியாளர்கள்.

    தலைவன் திரும்பி வருவான்

    தலைவன் திரும்பி வருவான்

    சமையலறையில் பேசிக் கொண்டிருக்கும் ஆண் போட்டியாளர்களிடம் நிரூப், இது எனக்கு செட்டே ஆகாது என்கிறார். அப்படியே கட் செய்து, இசைவாணி பாட்டு பாடுவது, அடுத்த கட்டில் ராஜு, இங்க பாரு அப்புறமா கூட்டிப் போய் லவ் பண்ணு என்கிறார். அடுத்த கட்டில் பெட்ரூமில் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அபிஷேக், மச்சான்...என் தலைவர் திரும்ப வருவான்டா என்கிறார்.

    என்டர்டைன்மென்ட் கன்ஃபார்ம்

    என்டர்டைன்மென்ட் கன்ஃபார்ம்

    பிரியங்கா, ராஜுவின் இந்த காமெடி ப்ரோமோவை பார்த்து விட்டு ரசிகர்கள் அனைவரும் பிரியங்கா, ராஜு இந்த சீசனை நிச்சயம் என்டர்டைன் பண்ணுவார்கள். முந்தைய சீசனை போல் நிச்சயம் இந்த சீசன் இருக்காது என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். போன சீசனை போல் வாயிலேயே வடை சுட வைக்காம இந்த சீசனிலாவது ஃபிசிக்கல் டாஸ்க் கொடுங்கப்பா என சிலர் கேட்டுள்ளனர்.

    நம்பிக்கையில் ரசிகர்கள்

    நம்பிக்கையில் ரசிகர்கள்

    இந்த ப்ரோமோ வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் லைக் செய்து, கமெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களின் கமெண்ட்களை பார்க்கும் போது இந்த சீசன் காமெடி, என்டர்டைன்மென்ட்டாக இருக்கும் என்ற நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் இருப்பது நன்றாக தெரிகிறது. ஆனால் ரசிகர்கள் நினைப்பதை போல் இது காமெடி என்டர்டைன்மென்டாக இருக்குமா அல்லது ரணகளமாக மாறுமா என்பது போக போக தான் தெரியும்.

    English summary
    Vijay tv revealed first and second promos for bigg boss tamil season 5 as jolly entertained one. fans like this promos and hope that this season would be better than previous seasons. priyanka and raju will entertain this season.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X