சின்ன புத்திதனமாக நடந்துகிட்டேன்… பாவ்னியிடம் கைக்கூப்பி மன்னிப்பு கேட்ட ராஜு!

சென்னை : கடந்த வாரம் ட்ரூத் ஆர் டேர் கேம் விளையாடும் போது, அபினையை பார்த்து ராஜு கேட்ட கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திருமணமான ஆணை.. இவ்வாறு இன்னொரு பெண்ணுடன் சம்பந்தப்படுத்தி பேசுவது ஒரு இழிவான செயல் என்று இணையத்தில் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதுவரை நாள் வரை தன் மீது நெகட்டிவ் கமெண்ட்கள் வராமல் பார்த்துக் கொண்ட ராஜு லூஸ் டாக்கால் பேசு பொருளாளார்.

மோசமான கேள்வி

மோசமான கேள்வி

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் truth or dare கேம் விளையாடியபோது அபினையை பார்த்து ராஜு, பாவ்னியை நீங்க லவ் பண்றீங்களா என கேட்டார். இதனால், பாவ்னியின் முகம் அப்படியே வாடிப்போனது.

கேவலமான விஷயம்

கேவலமான விஷயம்

ராஜு இப்படி கேட்டது கேவலமான விஷயம் என பிரியங்கா கூறினார். ஆனால் தாமரை ராஜுவுக்கு ஆதரவாக பேசினார். இது கேள்வி மட்டும் தானே.. ஆமா, இல்லை என சொன்னால் முடிந்துவிட்டது. அபினை மற்றும் பாவனி இருவரும் எப்போதுமே ஒன்றாக தான் இருக்கிறார்கள். ஒரு மணி நேரம் தான் மற்றவர்களிடம் பேசுகிறார் என்றார்.

பல நெகட்டிவ் கமெண்ட்

பல நெகட்டிவ் கமெண்ட்

இருப்பினும் ராஜூ கேட்ட கேள்வி பலரின் பேசு பொருளானது. இது கேம் தான் என்றாலும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு சங்கடமான கேள்வி கேட்க வேண்டும் என்றும், ராஜு கேட்ட தவறு இல்லை பல கருத்துக்கள் இணையத்தில் வெளியானது. இதுவரை தன் மீது பெரிய அளவிற்கு நெகட்டிவ் கமெண்ட்கள் வராமல் பார்த்துக் கொண்ட ராஜு, இந்த ஒரு கேள்வி மூலம் தனக்கு இன்னொரு முகமும் இருக்கிறது என்று காட்டியுள்ளார்.

மன்னிப்பு கேட்ட ராஜு

மன்னிப்பு கேட்ட ராஜு

இந்நிலையில்,பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று, truth or dare கேம் விளையாட்டின் போது, சின்ன புத்திதனமாக நடந்து கொண்டேன் என்று அபிநய் மற்றும் பாவ்னிடம் கைக்கூப்பி மன்னிப்பு கேட்டார். இந்த விஷயத்திற்காக நான் முன்பே மன்னிப்பு கேட்டு இருப்பேன் ஆனால், அது நாமினேஷனுக்காக கேட்டமாதிரி இருந்து இருக்கும், இதனால் நான் இப்போது கேட்கிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X