ராஜூ கேட்ட அந்த கேள்வி... அதிர்ந்து போன அபிநய்.. ஷாக்கான ஹவுஸ்மெட்ஸ்!
சென்னை : பிக் பாஸ் வீட்டில் நேற்றை எபிசோடில் ராஜூ, அபிநய்யிடம் பாவனியை லவ் பண்றியா என கேட்டது தற்போது பேசுபொருளாகி உள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத் தலைவராக அபினய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ப்ரியங்கா, தாமரைச் செல்வி, ஐக்கி பெர்ரி, நிரூப், இமான், பாவனி ஆகியோரின் பெயர் நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ளது.

கனா காணும் காலங்கள்
பிக் பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக கனா காணும் காலங்கள் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்றது. இதற்காக பிக் பாஸ் வீடு பள்ளிக்கூடமாக மாற்றப்பட்டது. இதில், மாணவராக இருந்த இமான் அண்ணாச்சி செய்த சேட்டைகள் ரசிக்கும் படி இருந்தது. தமிழ் ஆசிரியராக ராஜூ சிறப்பாக செயல்பட்டார். வார்டனாக இருந்த சிபி பள்ளிக்குழந்தைகளை மிரட்டிக்கொண்டே இருந்தார். இருந்தாலும் இந்த டாஸ்க் நகைச்சுவையாக இருந்தது.

சிறந்த பர்ஃபாமெர்
இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் நேற்று, நடந்து முடிந்த கனா காணும் காலங்கள் டாஸ்க்கின் சிறந்த பர்ஃபாமெர்களாக சிபி, இமான், அபிஷேக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் 3வரும் அடுத்த வாரம் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்று பிக் பாஸ் அறிவித்தார். வொர்ஸ் பர்ஃபாமெர்களாக நிரூப், அமீர் ஆகியோரை தேர்வு செய்தனர். வொர்ஸ் ஃபெர்மாமென்ஸ் வென்ற இருவரும் பாதாள சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

லவ் பண்றியா
இதையடுத்து, ட்ரூத் ஆர் டேர், விளையாட்டை போட்டியாளர்கள் விளையாடினர். மேஜையின் மீது பாட்டிலை சுற்ற வேண்டும் பாட்டில் யாரை பார்க்கிறதோ சுற்றுபவர் அவரிடம் கேள்வி கேட்க வேண்டும். ராஜூ அபினய்யிடம் கேள்வி கேட்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இதையடுத்து, ராஜூ,பாவனியை லவ் பண்றியா? என கேட்க, அபினய்யும் பாவனியின் முகம் அப்படியே மாறிவிடுகிறது.

வேணும்னு கேட்கல
இது குறித்து மாற்ற போட்டியாளர்கள் ராஜூவிடம் எதுக்கு அப்படி கேட்டீங்க அவங்க முகம்அப்படியே மாறிவிட்டது என்றும், நீ கேட்டது தவறு என பிக் பாஸ் போட்டியாளர்கள் ராஜூ செய்த தவறை சுட்டி காட்டினார்கள். உடனே ராஜூ நான் வேணும்னு கேட்கலா திடீர்னு வாயில வந்துடுச்சு என்று கூறினார்.

நாம ப்ரண்டுதான்
இதையடுத்து, பாவ்னி அபிநய்யிடம் நாம இரண்டு பேரும் எப்படி பழகுரோம், பேசுறோம்னு நமக்கு தெரியும் ஸோ நீ கவலைப்படாதே, நாம இங்கே இருந்து வெளியில போனக்கூட நாம ப்ரண்டாத்தான் இருப்போம் என்கிறார் பாவ்னி.


Click it and Unblock the Notifications











