அட போங்கப்பா... மீண்டும் நாமினேஷனில் அபிநய்… டார்கெட் செய்யும் ஹவுஸ்மெட்ஸ்!
சென்னை : பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் விளும்பு வரை வந்து காப்பாற்றப்படும் அபிநய் இந்த வாரமும் நாமினேஷன் லிஸ்டில் இடம் பிடித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டிலிருந்து ஐக்கி பெர்ரி ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்பட்டார்.
சிபி, ராஜு,அண்ணாச்சி, வருண், நிரூப்,அமீர், சஞ்சீவ், அபிநய், அபிஷேக், பாவ்னி, பிரியங்கா, அக்ஷரா, தாமரை என 13 போட்டியாளர்கள் தற்போது வீட்டில் உள்ளனர்.

நாமினேஷன் ப்ராசஸ்
பிக் பாஸ் வீட்டில் நேற்று திங்கட் கிழமை என்பதால் நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது. இதில், எகிறி எகிறி சண்டை போடுகிறார், திரும்ப வந்தும் விளையாடலாமா வேண்டாமா என்ற மனநிலையில் இருக்கிறார், லூஸ் டாக் விட்டாரு போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இந்த வார எவிக்ஷன் ப்ராசஸிற்கு நாமினேட் ஆன நபர்களின் பெயரை பிக் பாஸ் கூறினார். வழக்கமாக பெயர்களை மட்டும் சொல்லும் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே கொளுத்திப்போடும் வகையில் அவர்கள் கூறி காரணத்தையும் கூறியுள்ளார்.

நாமினேஷனில் 10 பேர்
அக்ரா, பாவ்னி,சிபி, இமான், பிரியங்கா, ராஜு, வருண், அபிஷேக், தாமரை மற்றும் அபிநய் என்று கூறுகிறார். இதில் வழக்கம் போல மற்றும் அபிநய் என்று வந்ததும் போட்டியாளர்கள் கை தட்டி சிரித்தனர். இதில் சஞ்சீவ், அமீர், நிரூப்பை தவிர மற்ற அனைவரின் பெயரும் நாமினேஷன் லிஸ்டில் உள்ளது.

காப்பாற்றப்படுகிறார்
பிக்பாஸ் ஷோவில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் அபிநய் பெயர் லிஸ்டில் வருகிறது. அவரும் வீட்டில் பெரிதாக எந்த செயல்பாட்டுடனும் இருப்பது போல தெரியவில்லை. இதில் ஒவ்வொரு வாரமும் விளும்பு வரை சென்று வரும் அபிநய் கடைசியில் காப்பாற்றப்படுகிறார். இது எப்படி அவர் மட்டும் ஒவ்வொரு வாரமும் காப்பாற்றப்படுகிறார் என்று நெட்டிசன்ஸ்கள் கேட்டு வருகின்றனர்.

தொடர்ந்து டார்கெட்
கடந்த வாரம் வீட்டின் தலைவராக இருந்ததால், அபிநய் நாமினேட் ஆகவில்லை. இந்த வாரம் வழக்கம் போல நாமினேஷன் லிஸ்டில் அவரின் பெயர் வந்துள்ளது. போட்டியாளர்களும் அவரை தொடர்ந்து டார்கெட் செய்து நாமினேட் செய்துதான் வருகிறார். இருப்பினும் அவர் எப்படியாவது காப்பாற்றப்படுகிறார். பொருத்திருந்து பார்க்கலாம் இந்த வாரம் என்ன நடக்கும் என்று.


Click it and Unblock the Notifications











