யாரையும் மதிக்காது.. எவனாவது செவுள்ல அடிச்சாதான் திருந்தும்.. தனலட்சுமியால் கடுப்பான ஏடிகே!
சென்னை : வெளியில போய் செவுள்ல அடிவாங்குனாத்தான் தனலட்சுமி திருந்தும் என்று ஏடிகே கொந்தளித்து பேசி உள்ளார்.
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நான்காவது வாரம் தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, ஷிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் என்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து மகளை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் காரணமாக வீட்டிலிருந்து வெளியேறினார்.

பொம்மை டாஸ்க்
கடந்த வாரம் நடந்த பொம்மை டாஸ்கில் அனல் பறந்தது. ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டும், முட்டி மோதிக் கொண்டனர். வார்த்தையால் மட்டுமல்ல, கையாலும் தள்ளி அடித்துக்கொண்டனர். இது ரசிகர்களுக்கு நல்ல விறுவிறுப்பாக இருந்த நிலையில், வார இறுதியில் வீட்டுக்கு வந்த கமல், போட்டியாளர்களை விளாசினார்.

குறும்படம்
பொம்மை டாஸ்க்கின் போதே ஷெரினாவை யார் தள்ளிவிட்டது என்பதில்தான் சண்டை மூண்டது. அப்போது அங்கிருந்த அசீம், தனலட்சுமி தான் ஷெரினாவை தள்ளிவிட்டது என குற்றம்சாட்டியதுடன், நீயெல்லாம் ஒரு பொண்ணா என கசப்பான வார்த்தையால் தனலட்சுமியை திட்டினார். இதையடுத்து கமல் குறும்படம் போட்டு தனலட்சுமி தள்ளிவிடவில்லை என்று கூறியதோடு அவரை பாராட்டினார்.

செவுள் மீது அடிப்பான்
கமல் பாராட்டியதால், தலைக்கணம் ஏறிப்போன தனலட்சுமி தொடர்ந்து வீட்டில் இருப்பவர்களிடம் திமிராக நடந்து வருகிறார். அந்தவகையில், ஏடிகே ராபர்ட் மாஸ்டரிடம் உட்கார்ந்து உரையாடி கொண்டிருந்தார். அப்போது, தனலட்சுமி பற்றி பேச துவங்கிய ஏடிகே, தனலட்சுமி இந்த வீட்டில், இருப்பதிலே அதுதான் ரொம்ப ரொம்ப மோசம். யாரையும் மதிக்க மாட்டுது. எவனாவது முடியை பிடித்து செவுள் மீது அடிப்பான். அப்போதுதான் அது திருந்தும் என பேசியுள்ளார்.

ஓவர் திமிரு
இதே போலத்தான் பிக் பாஸ் ரசிகர்களும் தனலட்சுமியை கமல் பாராட்டியதால், ஓவர் திமிரா நடந்துக்குறாங்க. கமல் தனலட்சுமியை பாராட்டி இருக்கக்கூடாது , பாராட்டியதால், என்னமா ஹெட் வெயிட் காட்டுது. ஒரு டேஞ்சர் ஜோனில், இல்ல எலிமினேஷனில் வந்தாதான் இந்த பெண்ணு அடங்கும் என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











