twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தலையில் அடிபட்டது உண்மையா? பொய்யா? ஷெரினாவை மடக்கி மடக்கி கேள்வி கேட்ட ஏடிகே!

    |

    சென்னை : தலையில் அடிபட்டது உண்மையா? பொய்யா? ஏடிகே ஷெரினாவை மடக்கி மடக்கி கேள்வி கேட்டார்.

    நேற்றைய எபிசோடில் கமல், போட்டியாளர்களுக்கு இடையே ஒரு டாஸ்க் ஒன்றை கொடுத்தார். அதாவது போட்டியாளர்களில் ஒருவர் செலிபிரிட்ரி ஆகவும் ஒருவர் நிருபராகவும் இருக்கவேண்டும்.

    இதில் செலிபிரிட்ரி நிருபர் கேட்கும் கேள்விக்கு தயங்காமல் பதில் கூற வேண்டும். இதில், ஏடிகே நிருபராக இருந்து ஷெரினாவை மடக்கி மடக்கி கேள்வி கேட்டார்.

    யாரையும் மதிக்காது.. எவனாவது செவுள்ல அடிச்சாதான் திருந்தும்.. தனலட்சுமியால் கடுப்பான ஏடிகே!யாரையும் மதிக்காது.. எவனாவது செவுள்ல அடிச்சாதான் திருந்தும்.. தனலட்சுமியால் கடுப்பான ஏடிகே!

    ஏன் மலையாளத்தில் பேசுறீங்க

    ஏன் மலையாளத்தில் பேசுறீங்க

    அதில், பிக் பாஸ் வீட்டில் ஏன் மலையாளத்தில் பேசுறீங்க என்றும், நீங்கள் மலையாளத்தில் பேசியதற்கு, பிக் பாஸ் 2 முறை கண்டித்த போதும் தொடர்ந்து மலையாளத்தில் பேசுவது ஏன் என்று ஏடிகே ஷெரினாவிடம் கேட்டார். இதற்கு பதிலளித்த, ஷெரினா, மலையாளி, மலையாளியை பார்க்கும் போது மலையாளத்தில் பேசிவிடுகிறேன். ஆனால், உடனே தமிழில் பேசத்தொடங்கிவிடுவேன், என் மொழி மலையாளம் என்பதால் அடிக்கடி அப்படி நடந்து விடுகிறது என்றார்.

    மற்றவர்களிடம் ஏன் பேசுவதில்லை

    மற்றவர்களிடம் ஏன் பேசுவதில்லை

    இதையடுத்து, நீங்கள் ஒரு சிலருடன் மட்டும் தான் பேசுகிறீர்கள் மற்றவர்களிடம் பேசுவது இல்லை, அது ஏன் என்று கேட்டார். அப்படி இல்லை நான் அனைவரிடமும் நன்றாகத்தான் பேசுகிறேன். ஆனால், ஆயிஷாவிடம் கொஞ்சம் அதிகமாக பேசுகிறேன் அது ஏன் என்று உங்களுக்கே தெரியும் என்றார்.

    தலையில் அடிபட்டது உண்மையா? பொய்யா?

    தலையில் அடிபட்டது உண்மையா? பொய்யா?

    இதோடு கேள்வி கேட்பதை நிறுத்திவிடுவார் என்று பார்த்தால், கேள்வியை நிறுத்தாமல் பொம்மை டாஸ்கின் போது நீங்க கீழே விழுந்து தலையில் அடிபட்டதாக சொன்னீங்க, தலையில் அடிபட்டது உண்மையா? பொய்யா? என்று மடக்கி கேள்வி கேட்டார். இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ஷெரினா, அடிபட்டது உண்மைதான், அப்படி உங்களுக்கு சந்தேகம் இருந்தா மைனா மற்றும் ரச்சிதாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றார். இருவரின் கேள்வி பதில் கவனமாக பார்த்துக்கொண்டிருந்த கமல், இந்த பேட்டிதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று ஏடிகேவை பாராட்டினார்.

    17 போட்டியாளர்கள்

    17 போட்டியாளர்கள்

    இதையடுத்து, ஷெரினா குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர். அக்டோபர் 9ந் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி வெற்றிகரமான ஒரு மாதத்தை எட்டி உள்ளது.

    English summary
    Bigg Boss tamil season 6 : ADK questioned Sherina, Kamal haasan appreciating ADK
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X