ப்பா.. என்ன அழகு.. இமீடியட்டா ஆர்மி ஆரம்பிச்சிடுவாங்களே.. பிக் பாஸ் 6 போட்டியாளர் யாரு இந்த ஆயிஷா!

சென்னை: பார்க்க அப்படியே ஆர்யா மனைவி சாயிஷா மாதிரியே இருக்காரே யாரு இந்த ஆயிஷா என பார்த்தால், சத்யா சீரியல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் இவர் என்பது தெரியவந்தது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், இந்த முறை போட்டியாளராக அடியெடுத்து வைத்துள்ளார் ஆயிஷா ஜீனத் பீவி.

பார்த்த உடனே பிடித்துப் போகும் முக அழகை கொண்ட இவருக்கெல்லாம் இமிடியட்டா ஆர்மி ஆரம்பித்து விடுவார்கள் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பிக் பாஸ் போட்டியாளர்

பிக் பாஸ் போட்டியாளர்

இந்த முறை கோழி அமுக்குவது போல பிக் பாஸ் வீட்டில் 20 பேரை பிடித்து போட்டிருக்கிறார்கள். உள்ளே போய் அன்பு பாசம்னு பேச போறாங்களா? இல்லை அடிச்சிட்டு மாளப் போறாங்களா? என வெயிட் பண்ணி பார்க்கும் முன்னே சில அழகு பதுமைகள் போட்டியாளர்களாக மாறி கண்ணை பறிக்கின்றனர். அப்படியொரு போட்டியாளர் ஆயிஷா ஜீனத் பீவி பற்றித் தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

யாரு இந்த ஆயிஷா

யாரு இந்த ஆயிஷா

1993ம் ஆண்டு காசர்கோட்டில் பிறந்தவர் ஆயிஷா ஜீனத் பீவி. சென்னையில் கல்லூரி படிப்பை முடித்த இவர், கடந்த 2017ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள், ஜீ தமிழில் வெளியான சத்யா, செம்பருத்தி, சத்யா 2 சீரியல்களில் நடித்து வந்த ஆயிஷா தான் இனி அடுத்த 100 நாட்களுக்கு பிக் பாஸ் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளார்.

மிரட்டல் போலீஸ்

மிரட்டல் போலீஸ்

பார்க்க ஆண் மகனை போல போலீஸ் கெட்டப்பில் மிரட்டல் லுக்கில் சத்யா சீரியலில் நடித்திருந்தவர் தான் இந்த ஆயிஷா. பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகும் இவருக்கு சினிமா வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரும், அதே நோக்கத்துடன் தான் பிக் பாஸ் போட்டியாளராக பங்கேற்க போகிறார் என்றும் கூறுகின்றனர்.

வாட்டர் பேபி

வாட்டர் பேபி

சின்னத்திரை நடிகை ஆயிஷா சரியான வாட்டர் பேபி. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் இருந்தபடி ஏகப்பட்ட போட்டோக்களை போட்டுத் தாக்கி உள்ளார். இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் வேற நீச்சல் குளம் செயல்பாட்டில் உள்ள நிலையில், ஆயிஷாவை கையிலே பிடிக்க முடியாது என்கின்றனர். குறும்புத்தனம் நிறைந்த இவர் ரசிகர்களை விரைவிலேயே கவர்ந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X