Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நாள் குறித்த காங்கிரஸ்.. பிப்.3ல் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல்?
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Sports
ஹர்திக் பாண்ட்யாவின் பேராசை? கேப்டன்சியை தவறாக பயன்படுத்தியதால் இந்தியா தோல்வியா.. குவியும் புகார்!
- Technology
பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? அப்போ இந்த போன் ரூல்ஸ் பின்பற்றனும்.!
- Automobiles
அனல் பறக்கும் ஏலம்... மஹிந்திராவின் 16 லட்ச ரூபா காரை கோடிகளை கொட்டி வாங்க முந்தியடிக்கும் கோடீஸ்வரர்கள்!
- Lifestyle
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
- Finance
கௌதம் அதானியை இனி காப்பாற்ற முடியாதா..? 10 பில்லியன் டாலர் மாயம்.. 7வது இடம்..!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
பெரியார் போல் அப்படியே பேசிய அமுதவாணன் மகன்..நெகிழ்ந்து கட்டியணைத்த விக்ரமன்!
சென்னை : பிரீஸ் டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அமுதவாணனின் மகன் தந்தை பெரியார் பேசுவதைப் போல பேசி போட்டியாளர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால், ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது திறமையை நிரூபிக்க போராடி வருகிறார்கள்.
இந்த வாரம் நடந்த ஓபன் நாமினேஷனில் ரச்சித்தாவை தவிர, அசீம்,விக்ரமன், அமுதவாணன், ஏடிகே,கதிர், ஷிவின்,மைனா, மணிகண்டன் என அனைவருமே நாமினேட் ஆகி உள்ளனர். இதில், இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள்
அசீமுக்கு ரெட் கார்டு கொடுங்க..அப்போது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி விளங்கும்..கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!

பிரீஸ் டாஸ்க்
இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்த பிரீஸ் டாஸ்க் நேற்று முதல் தொடங்கி உள்ளது. இதில்,மைனாவின் கணவன் மற்றும் மகன் வந்திருந்தார்கள். அப்போது மைனாவின் கணவர் யோகி, பிக் பாஸ் ஷோக்கு நீ லாயிக்கே இல்லை, யாராவது தப்பு பண்ணா அதை தட்டிக்கேக்கணும், அது தான் மக்களுக்கு பிடிக்கும், யாருக்கும் பயப்படாமல் விளையாடு என்று சில அறிவுரைகளை கூறினார். மேலும், ஷிவினை எனக்கு பிடிக்கும் என்று கூறி அவருக்கு பூ கொடுத்தார். அதே போல, விக்ரமன் நீங்க சிரித்துக்கொண்டே இருந்தால், வீடு இன்னும் நல்லா இருக்கும் என்று அனைவர் இடத்திலும் பேசினார்.

வேறலெவல் மிமிக்ரி
இதையடுத்து, அமுதவாணனின் மனைவி மற்றும் மகன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தார்கள். அமுதவாணனைப் பார்த்ததும் அவரது மனைவி கட்டியணைத்து முத்தமிட்டார். அவரது இருமகன்களும் அமுதவாணனைப் போல மிமிக்ரி செய்வதில் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததுமே ஷிவின், அசீம், விக்ரமன் போல அப்படியே பேசியும், அவர்களை இமிட்டேட் செய்தும் போட்டியாளர்களை மகிழ்வித்தார்.

நெகிழ்ந்த விக்ரமன்
விக்ரமனுக்காக ஒரு ஸ்பெஷல் ஐட்டம் ஒன்று இருக்கு என்பது போல, தந்தை பெரியார் பேசுவது போல அப்படியே பேசிக்காட்டி ஹவுஸ்மெட்டுகளின் கைத்தட்டலை பெற்றார். தந்தை பெரியார் பேசுவது போல பெண்களின் உரிமைக்காக பேசிய அமுதவாணனின் மகனைப் பார்த்து நெகிழ்ந்து போன விக்ரமன் அவனை கட்டியணைத்து நெகிழ்ந்து முத்தமிட்டார்.

எங்களை நினைச்சு அழல...
இதையடுத்து, அமுதவாணனின் மனைவி எங்களை நினைச்சு கூட நீங்க அழவில்லை, ஆனால், ஜனனி வெளியில் போனதும் கதறி கதறி அழுகிறீங்க, யார் அந்த ஜனினி என தாறுமாறான கேள்விகளை கேட்க என்னடா பதில் சொல்வது என்று தெரியாமல் அமுதவாணன் முழித்துக்கொண்டு இருந்தார். மேலும், தனலட்சுமி நல்ல விளையாடிக்கொண்டு இருந்தாங்க, அவங்க வெளியில் போவாங்கனு யாரும் நினைக்கல என்று கூறியுள்ளார்.