அப்படியே ஒரு மாதிரி தோணுது..அசல் கோலார் ஹனிமூனுக்கு வந்து இருக்காரா? வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
சென்னை : யாரா இருந்தாலும் கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் பார்க்காமல் சும்மா தடவு தடவுனு தடவி வருகிறார் அசல் கோலார்.
காலை முதல் நள்ளிரவு வரை ஏதாவது ஒரு சில்மிஷம் செய்து நெட்டிசன்ஸ்களிடம் வசமாக மாட்டிக்கொள்கிறார் அசல் கோலார்.
இவர் செய்யும் மன்மத லீலைகளை வீடியோ க்ளிப்பாக எடிட் செய்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்து என்ன என்னவெல்லாம் கெட்ட வார்த்தைகளால் திட்டமுடியுமோ அப்படி திட்டி வருகின்றனர்.

அசல் கோலார்
பிக் பாஸ் சீசன் 6ன் போட்டியாளரான அசல் கோலாருக்கு இணையவாசிகள், தடவல் மன்னன், சில்மிஷ சிகாமணி என தினம் தினம் ஒரு பெயரை வைத்து அழைத்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஏதோ ஜாலியான பேசுகிறார் என நினைத்தால், வயது வித்தியாசம் பார்க்காமல், மகேஸ்வரி, ரச்சிதா என அனைவரையும் ஒரு தடவுதடவி விட்டார். குறிப்பாக நிவாஷினியிடம் ஒருபடி மேல சென்ற கடிப்பது, கட்டிப்பிடிப்பது என எல்லை மீறி வருகிறார்.

கமலை திட்டும் ரசிகர்கள்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே, ரசிகர்கள் இதை கண்டித்து வருகின்றனர். கடந்த வாரம் அசல் கோலாரிடம் கமல் இதுகுறித்து கேட்பார் என்று பார்த்தால், எதுவுமே சொல்லாமல் நிகழ்ச்சியை முடித்துவிட்டார். இதனால், ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபமும் கமல் மீது திரும்பி உள்ளது. பலர், பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியில் சல்மான் கான் எப்படி தொகுத்து வழங்குகிறார் என்று பாருங்கள் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஒரு மாதிரி தோணுது
பிக் பாஸ் நிகழ்ச்சியை எடிட் செய்து பல விஷயங்களை மறைத்து ஒளிபரப்பினாலும், 24 மணி நேர நேரலையில் பல விஷயங்கள் கொத்தாக மாட்டிக்கொள்கிறது. நிவாஷினியை பார்த்து உன்ன பார்த்தா...அப்படியே ஒரு மாதிரி தோணுது என்று பல்லை கடித்துக்கொண்டு, ஆபாசமாக பேசியிருக்கிறார் அசல். இதற்கு நிவாஷினி எதுவுமே சொல்லாமல் இருப்பது இன்னும் கடுப்பாக இருக்கிறது.

பல்லைக்காட்டும் நிவாஷினி
குயின்ஷி சமைத்துக்கொண்டு இருக்கும், அருகில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த அசல், அப்படியே பாய்ந்து சென்று அவரை கடிக்கிறார். இதனால், கடுப்பான குயின்ஷி அசலை பார்த்து முறைத்தால், அங்கிருந்து அமைதியாக சென்றுவிட்டார் அசல். ஆனால், நிவாஷினி அசல் எது செய்தாலும், பல்லை காட்டிக்கொண்டே இருக்கிறார்.

ஹனிமூன் வந்து இருக்கிறார்
பெண்களை தொடுவதையும், சில்மிஷம் செய்வதையும் பார்த்த ரசிகர்கள் பலர் அசல் கேம் விளையாட பிக் பாஸ் வீட்டிற்கு வந்த மாதிரி தெரியவில்லை. ஏதோ ஹனிமூனுக்கு வந்த மாதிரி நடந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியை குழந்தைகளும் பார்க்கிறார். வீட்டிற்குள் சுற்றி சுற்றி அத்தனை கேமிராக்கள் இருக்கிறது. எதைபற்றியும் கவலை படாத அசல் கோலாரை கண்டித்து வெளியில் அனுப்ப வேண்டும் என இணையத்தில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











