அசல் கோலாரின் சம்பளம்..பெண்களை தடவுவதற்கு லட்சக்கணக்கில் சம்பளமா? ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் வீட்டில் அசல் கோலாரு 21 நாட்கள் இருந்துள்ள நிலையில், அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கானா பாடகரான அசல் கோலாரின் உண்மையான பெயர் வசந்தகுமார். மெக்கானிக்கல் இன்ஜினியரான இவர், பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னை காசிமேட்டில் தான்.
ஜோர்த்தாலே என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமான அசல் கோலார் இதுவரை 50 பாடல்கள் வரை எழுதி உள்ளார். தமிழ் பாடகரான இவர் பல தெலுங்கு படங்களிலும் பாடியுள்ளார். போனா போவுரா, லைஃப் ஆஃப் இளங்கலை, காவா போன்ற பாடல்களை இவர் பாடி உள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தரமான சம்பவத்தை கமல்ஹாசன் நிகழ்த்தினார். அப்படி அசீம், ஆயிஷா போன்றவர்களை வெளிப்படையாகவே கலாய்த்து அவர்கள் செய்த கேவலமான செயலை புட்டுபுட்டு வைத்தார். எந்த சீசனிலும் இதுபோல அவர் வெளுத்து வாங்கியது இல்லை.

அசல் கோலார் வெளியேறினார்
இதையடுத்து, இந்த வாரம் எவிக்ஷனில் யார் வெளியேறுவார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் கமல் ஹாசனால், அசல் கோலார் வெளியேற்றப்பட்டார். இவர் வீட்டிற்குள் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வீடியோவாக வெளியிட்டு அவரை வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என போர்க்கொடி தூக்கினர். மக்களின் எதிர்ப்பு காரணமாகவே அசல் கோலார் வெளியேறினார்.

அழுது புலம்பும் நிவாஷினி
மேலும், உங்கள ஏன் இங்க கொண்டு வந்து வெச்சு இருக்காங்கன்னு புரியலன்னு சொன்னீங்க. நான் விளக்குறத விட வெளியே போனதும் உங்க நண்பர்கள் உங்ககிட்ட சொல்லுவாங்க என கமல் நைசாக அசல் கோலாருக்கு குட்டு வைத்தார். நிவாஷினி அசல் வெளியே போனதை நினைத்து, சாப்பிட பிடிக்கல, தூங்க பிடிக்கல என தனிமையில் அழுது புலம்பி வருகிறார்.

21 நாள் சம்பளம்
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்ததற்காக அசல் கோலார் வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில், மொத்தம் அவர் 21 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ளார். அசல் கோலாருக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 17 ஆயிரம் வரை சம்பளமாக பேசப்பட்டுள்ளது. அதன்படி அவருக்கு ஒரு நாளைக்கு 16 ஆயிரம் என்ற முறையில் 3 லட்சத்து 36 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளார்.

தடவுவதற்கு இவ்வளவு சம்பளமா?
இந்த தகவலை கேள்விப்பட்ட பிக் பாஸ் பார்வையாளர்கள், பெண்களை தடவுவதற்கு இத்தனை லட்சமா என்றும், அவருக்கு சம்பளமே கொடுத்து இருக்கக்கூடாது, அப்போது தான் அவர் செய்த தவறும் புரியும் என்று நெட்டிசன்கள் அசல் கோலாரு வீட்டை விட்டு போன பின்பும் திட்டி தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











