பைத்தியம் முத்திவிட்டது..ஆசீமை வெளியில் அனுப்புங்க..ட்விட்டரில் திட்டும் நெட்டிசன்கள்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6ன் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோவில், ஆசீமுக்கும் விக்ரமனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தரக்குறைவாக திட்டிக்கொண்டனர்.
வரிசைப்படுத்துதல் டாஸ்கில் ஆசீம், விக்ரமனை பார்த்து யோவ் வேலையை பாருடா, வெள்ளை சட்டை போட்டுட்டு.. அரசியல்வாதினு சொல்லிட்டு இருக்கே..போடா என்று ஒருமையில் பேசுகிறார்.
மரியாதை இல்லாமல் பேசாதே என்று பலமுறை விக்ரமன் சொன்ன போதும், ஆசீம் தெனாவட்டாகவே பேசுகிறார். இந்த ப்ரோமோவை பார்த்து டென்ஷனான நெட்டிசன்ஸ் ஆசீமை திட்டிதீர்த்து வருகின்றனர்.

பைத்தியம் முத்திவிட்டது
ஆசீம் காலையில் ஆயிஷாவை ஒருமையில் பேசினார். தற்போது விக்ரமனை ஒருமையில் பேசியதை பார்த்த ஒரு நெட்டிசன்ஸ், அசீமுக்கு என்ன ஆச்சு...பைத்தியம் முத்திப்போச்சு... ஒன்னு நாட்டாமை வேல பண்றான் இல்ல அட்வைஸ் பண்றான் ரெண்டு வேலையும் இல்லன்னா இப்புடி கத்தி சண்ட போடுறான்...அய்யோ..அய்யோ என பதிவிட்டுள்ளார்.

வெளியில் அனுப்புங்க
முதல்ல தனலட்சுமி வெளிய அனுப்ப சொல்லிட்டு இருந்தோம் அவள விட இந்த அசல் பெண்கள் கிட்ட தடவிட்டு இருந்தனு அவன வெளிய அனுப்ப சொல்லிட்டு இருந்தோம் இப்ப அவங்க இரண்டு பேர் இருகட்டும் முதல்ல இந்த ஆசீம் வெளிய அனுப்புங்கனு சொல்றோம் ஞாயிற்றுக்கிழமை யார் தான் வெளிய போக போறாங்க பார்க்கலாம் என்போது ஒரு நெட்டிசன்ஸ் கருத்து கூறியுள்ளார்.

காண்டுல பேசுகிறார்
ரேங்கிங் வரிசையில ஆசீம் கடைசி இடத்தில நின்னுட்டு இருக்காரு.. எல்லாரும் அவர் மீது குறைசொல்லித்தான் அவரை அங்க நிக்கவெச்சிருப்பாங்க.. அந்த காண்டுலதான் அவர் அப்படி ரியாக்சன்.. ஆயீஷா, விக்ரமன் கூட ஆல்ரெடி வாக்குவாதம் நடந்திருக்கு.. அதனால தான் தகுதிய பத்தி அப்படி கருத்து சொல்றார் என ஒரு பிக்பாஸ் பிரியர் கருத்து கூறியுள்ளார்.

வன்மம் உள்ளவர்கள்
விக்ரமன், ஆயிஷா, தனலட்சுமி வன்மம் உள்ளவங்களாம், அதனால் மத்தவங்க ஸ்டோரியை கேட்க விடாம பஸ்ஸெரை அடிச்சாங்க. மத்தவங்க எல்லாரும் தான் அன்பான நல்லவங்களாச்சே. அவங்க ஏன் பஸ்செரை அமுக்கினாங்க. நல்லவங்க போட்டின்னு வந்துட்டா ரொம்ப நல்லவங்க ஆயிடுவாங்க போல என ஒரு நெட்டிசன்ஸ் பதிவிட்டுள்ளார்.

பைத்தியம் இப்படித்தான் கத்தும்
ஆசீம் கத்தினா பெரிய ஆளா ஆயிடலாம்னு நினைக்கிறார் போல. பைத்தியங்களும் இப்படித்தான் கத்தும்னு ஆசீமை பார்க்கும்போது நல்லா தெரியுது என்று ஒரு இணையவாசி ஆசீமுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











