பாடிலாங்குவேஜ் மூலம் திருநங்கை ஷிவினை அசிங்கப்படுத்திய அசீம்..குவியும் கண்டனம்!

சென்னை : பாடி லாங்குவேஜ் மூலம் திருநங்கை ஷிவினை அசிங்கப்படுத்திய அசீமைக்கு இணையத்தில் கண்டனங்கள் குவித்து வருகின்றன.

சண்டை, அழுகை என காரசாரமாக தொடங்கி உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் ஜனனி, ரக்சிதா, அசல் கோலார், மகேஸ்வரி, ஏடிகே, அசீம், ஆயிஷா ஆகிய 7 பேர் உள்ளனர்.

இதில், குறைந்த வாக்குகள் எண்ணிக்கையில் அசல் கோலார் இந்த வாரம் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க்

நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க்

பிக் பாஸ் சீசன் ஐந்திலும், இந்த பொம்மை டாக்ஸ் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த டாஸ்கின் போதுதான் அக்ஷராவுக்கும் சிபிக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டனர். அதுமட்டும் இல்லாமல் நிரூப்,வருணுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, பொம்மையை ஒருவருக்கொருவர் பிடித்து பிடுங்கி கடைசியில் பொம்மை கிழிந்து கை வேறு, கால் வேறானது.

தள்ளு முள்ளு

தள்ளு முள்ளு

இதே டாஸ்க் இப்போதும் சண்டை,சச்சரவு தள்ளுமுள்ளு என்று நடைபெற்று வருகிறது. யாருடைய பொம்மை ஸ்டாலில் இல்லையோ அவர்கள் நாமினேஷனில் இடம் பெறுவார்கள் என்பதால் போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வருகிறார்கள். நேற்று நடைபெற்ற பொம்மை டாஸ்கில் அசீமின் பொம்மையை எடுத்துக்கொண்டு அசல் கோலாரு சென்றார்.

அசல் கோலாரு கீழே விழுந்தார்

அசல் கோலாரு கீழே விழுந்தார்

அப்போது, அசல் உள்ளே செல்லவிடாமல், ஜனனி, ஷிவின், தனலட்சுமி, ரக்சிதா ஆகியோர் தடுத்தனர். இரண்டுமுறை அசல் வெளியே தள்ளிவிடப்பட்டார். மேலும், அசல் கையில் இருந்த பொம்மையையும் கீழே விழுந்ததால், அசலுக்கு உதவியாக மணிகண்டன் சென்று பொம்மையை எடுத்துக்கொடுத்தார். அதன் பின் அசீமின் பொம்மையை அசல் கோலாரு உள்ளே வைத்தார்.

தனலட்சுமியை தள்ளிய அசீம்

தனலட்சுமியை தள்ளிய அசீம்

இதனால், கடுப்பான அசீம், ஏன் என் பொம்மையை தூக்கி போட்டாய் என கேட்டு தனலட்சுமியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது, தனலட்சுமியை தள்ளிவிட்டதால், மணிகண்டன் உதவியுடன் அசல் கோலார், அசீமின் பொம்மையை உள்ளே வைத்தார். இதனால், இது செல்லாது என்று தனலட்சுமி, பொம்மையை தூக்கி வெளியில் வீசினார். இதனால், அசீமுக்கும் தனலட்சுமிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது போது, தனலட்சுமியை தள்ளிவிட்டுவிட்டு, அசீம் பொம்மையை ஸ்லாட்டில் வைத்தார்.

மோசமான பாடிலாங்குவேஜ்

மோசமான பாடிலாங்குவேஜ்

இதனால், வீடே கலவரமானது அப்போது, விக்ரமன், ஷிவின் இருவரும் தனலட்சுமியை தள்ளிவிட்டது தவறு என கேட்டு அசீமிடம் சண்டை போட்டனர். ஆனால், அசீம்,ஷிவினைப் பார்த்து மோசமான பாடிலாங்குவேஜ் மூலம் ஷிவினை அசிங்கப்படுத்தி பேசினார். அந்த நேரத்தில் விக்ரமன் என்ன மற்ற நீ செய்வது தவறு என சுட்டிக்காட்டுகிறார். ஆனால், அதை எதையும் கேட்காமல் தொடர்ந்து ஷிவினை அப்படியே கிண்டலடித்தார் அசீம்.

குவியும் கண்டனம்

குவியும் கண்டனம்

ஒரு தேசிய தொலைக்காட்சியில் திருநங்கையை இப்படித் தான் கிண்டல் செய்வதா என்று பார்வையாளர்கள் கொந்தளித்துள்ளனர். மேலும், தன்னை ஒரு ஹீரோபோல நினைத்துக்கொண்டு வீட்டில் ஓவர் சுவுண்டு விட்டு வரும் அசீமை வெளியில் அனுப்ப வேண்டும் என இணையத்தில் அசீமுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X