Don't Miss!
- News
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக உணவகங்களில் பீப் பிரியாணி சேர்ப்பு! எஸ்சி, எஸ்டி ஆணையம் அதிரடி!
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Technology
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Sports
பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்தேன்.. என்னை இப்படியா நடத்துவீங்க. இந்தியாவை பாருங்க -உமர் அக்மல்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக் பாஸ் வீட்டில் 84 நாட்கள் இருந்த மணிகண்டன் பெற்ற சம்பளம் எவ்ளோ தெரியுமா?இத்தனை லட்சமா?
சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ள மணிகண்டன் ராஜேஷ் வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து விட்டதால், இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள போட்டியாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி ஜனவரி 22ந் தேதியுடன் முடிவடைகிறது.
பிக்
பாஸ்
சீசன்
6:
அசீம்
வெளியேவும்
இப்படித்தான்...
வெளியானது
வீடியோ
ஆதாரம்...
வெளுத்தது
சாயம்

மணிகண்டன்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனும், சீரியல் நடிகருமான மணிகண்டன் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாகவே விளையாடி உள்ளார். பிக் பாஸ் சீசனில் இதுவரை இல்லாத வகையில் நான்கு முறை வீட்டின் கேப்டனாகி உள்ளார். வலுவான போட்டியாளரான மணிகண்டன் நிச்சயம் டாப் 5 இடத்தில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று அவர் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார்.

மணிகண்டன் வெளியேறினார்
பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்தது. இதில் ரெட் கார்டை கொடுத்து போட்டியாளரை நாமினேட் செய்தனர். இதில், ரச்சித்தாவை தவிர மற்ற 8 போட்டியாளர்களும் நாமினேஷனில் சிக்கினர். இதில் வழக்கம் போல, ஷிவின்,அசீம்,விக்ரமன் என அனைவரும் காப்பாற்றப்பட்ட நிலையில் கதிர்,மைனா, மணிகண்டன் ஹாட் சீட்டில் இருந்தனர். இதில் மணிகண்டன் வெளியேறினார்.

நிச்சயம் வெளியேறுவார்
ரசிகர்கள் வலுவான போட்டியாளர் என்று நினைத்த மணிகண்டன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ரச்சித்தா, கதிரவன் இரண்டு பேருமே வீட்டில் எதையும் உருப்படியாக செய்தது இல்லை. இவர்கள் இருவரும் இத்தனை நாட்கள் ரசிகர்களின் தயவில் தான் வீட்டில் இருக்கிறார்கள். இதில் அடுத்த வாரம் கதிர் நிச்சயம் வெளியேறுவார் என்று கருதப்படுகிறது.

மணிகண்டன் சம்பளம்
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் 83 நாட்கள் இருந்த மணிகண்டன் வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில்,மணிகண்டனுக்கு ஒரு நாளைக்கு 18 ஆயிரம் ரூபாய் தொடங்கி 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாகப் பேசப்பட்டுள்ளதாகவும், அதன்படி மணிகண்டனுக்கு 16 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.