வீடு ஏன் இப்படி அலங்கோலமா கிடக்குது..இதக்கூடவா சொல்லித்தரணும்.. ஹவுஸ்மெட்டுகளுக்கு கமல் அட்வைன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இப்போது சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றது.

வீட்டில் கடந்த ஒரு வாரம் ஓவராக ஆட்டம் போட்ட அசீம் அமைதியாகிவிட்டார் ஒரளவு சண்டை போட்டாலும், பழையபடி ஆத்திரத்தில் கத்தாமல் அமைதியாகவே இருக்கிறார்.

ஆனால், தனலட்சுமி எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை எடுத்தெறிந்து பேசுவது, கண்டபடி திட்டுவது என ஓவர் திமிரில் இருக்கிறார். இதனால், போட்டியாளர்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் அவரை வசைபாடி வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் கமல் சும்மா தரமான சம்பவத்தை கொடுத்திருந்தார். பொம்மை டாஸ்கில் நடந்த சண்டை, தள்ளுமுள்ளை குறும்படம் போட்டு காட்டினார். அசீம், ஆயிஷா, ஷெரினா என மூன்று பேரையும் மாறி மாறி வறுத்தெடுத்தார். ஆண்டவரின் பேச்சைக்கேட்டு மிரண்டு போன ரசிகர்கள் இணையத்தில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.

மாஸ் என்ட்ரி

மாஸ் என்ட்ரி

இதையடுத்து, ரசிகர்கள் கமல் வரும் சனி மற்றும் ஞாயிறு எபிசோடுக்காக காத்திருந்தனர். நேற்று நீல நிற ஷர்ட்டும், அங்கங்கே ஒட்டுபோட்டு தைத்தபடி இருக்கும் பேண்ட்டுன் என்ட்ரி கொடுத்தார் கமல். வந்ததுமே இந்த வார கேப்டன் மணிகண்டனில் எவ்வாறு செயல்பட்டார் என்று ஒவ்வொருவரிடமும் கேட்டு தெரிந்து கொண்டார்.

சுத்தமாவே இல்லை

சுத்தமாவே இல்லை

மேலும்,வீட்டை நான் பார்க்கும் போது போட்டது போட்டபடி கிடக்கிறது. மெத்தை, கிச்சன் என எதுவுமே சுத்தமா இல்லை. நாம் இருக்கும் இடத்தை நாம் தான் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் அதையாருமே செய்வது இல்லை என்றார். சாப்பிட்டதும் தட்டை எடுத்து செல்ல வேண்டும் இது இன்று வரை கிராமத்தில் நடந்து வருகிறது. அதே போல அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் செல்ப் சர்வீஸ் இருக்கிறது என்றார்.

இதக்கூடவா சொல்லித்தரணும்

இதக்கூடவா சொல்லித்தரணும்

சாப்பிட்டதும் அதில் இருக்கும் குப்பையை தனியாக எடுத்துப்போடுவது தான் நல்லது. என்னத்தான் இதற்காக தனித்தனி டீம் இருந்தாலும், ஒவ்வொருவரும் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். கமல் இவ்வாறு கூறியதைக் கேட்டு அனைவரும் அமைதியாக அமர்ந்து இருந்தார். போட்டியாளர்கள் அமைதியாக இருக்கலாம் ஆனால், நெட்டிசன்ஸ் அமைதியாக இருப்பாங்களா? பல நெட்டிசன்ஸ் இதைக்கூடவா சொல்லித்தரவேண்டும் என கிண்டலாக கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X