நான் நானாகவே இல்லை.. இந்த கேமில் தோற்றுவிட்டேன்..கண்கலங்கிய ஆயிஷா!
சென்னை : இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், இந்த கேமில் நான் தோற்றுவிட்டேன் என்று கண்கலங்கி ஆயிஷா பேசி உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார்,ஷெரினா, அசீம், ராமசாமி, ஆர்யன் தினேஷ் என்ற ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி , விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என பல பேர் கலந்து கொண்டனர்
இதில் ஜி பி முத்து, மெட்லி ஒலி சாந்தி, அசல் கோலார் ஆகியோர் வெளியேற உள்ளனர்.

முதல் குறும்படம்
கடந்த வாரம் பொம்மை டாஸ்க்கின் போது ஷெரினாவை தனலட்சுமி தள்ளிவிடவில்லை என்பதை குறும்படத்தை போட்டுக்காட்டி கமல் உறுதிபடுத்தினார். நிகழ்ச்சியில் குறும்படம் போடப்பட்ட போது அதை பல முறை பார்த்த பின்பும் ஆயிஷா தனக்கு எதுவும் புரியவில்லை என்று கூறி இருந்தார்.

Portray பண்ணிடாதீங்க
மேலும், விளையாட்டுக்கு வரவில்லை என்று சொன்ன நீங்கள் ரச்சிதாவின் பொம்மையை ஏன் எடுத்தீர்கள் என்று கமல் கேட்டார். தான் செய்ததை எல்லாம் சுட்டிகாட்டிய போது கூட தான் அதை செய்யவே இல்லை என்பது போல முழித்துக் கொண்டே மாற்றி மாற்றி பேசிக்கொண்டு இருந்தார். மேலும், ரச்சிதாவின் பொம்மையை நான் அந்த நோக்கத்தில் எடுக்கவில்லை. தயவு செய்து என்னை நீங்க அப்படி Portray பண்ணிடாதீங்க ப்ளீஸ் என்று கமலிடம் கூறினார்.

திட்டிய ரசிகர்கள்
இதை கேட்டு, ஒட்டுமொத்த போட்டியாளர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளானார்கள். ஆனால், கமல் சிரித்தபடி நான் என் கேரக்டரை தான் Portray பண்ணிட்டு இருக்கிறேன் என்றார். ஆயிஷா கமலை அவமதிக்கும் வகையில் பேசியதால், ஆத்திரம் அடைந்த நெட்டிசன்கள் ஆயிஷாவை கண்டபடி திட்டி வருகின்றனர். நேற்றைய எபிசோடில் கூட Portray என்ற வார்த்தையை சுட்டிக்காட்டி வெறுப்பேத்தி இருந்தார்.

இருக்கு ஆனால் இல்லை
இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோவில், ஒரு செலபிரிட்டி ஒரு நிருபரை பேட்டி எடுக்கும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில் எலியும் பூனையுமான ஆசீம், தனலட்சுமியை பேட்டி எடுக்கிறார். அதில், நீங்கள் வந்த நோக்கம் நிறைவேறிக்கொண்டு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? என அசீம் கேள்வி கேட்க, தனலட்சுமி, எஸ்.ஜே சூர்யா போல இருக்கு ஆனால் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.

நான் தோற்றுவிட்டேன்
அடுத்ததாக ராம், ஜனனியிடம் உங்களுக்கு கோவம் அதிகமா வருது, பொருட்களை உடைக்கிறீர்கள் அது ஏன் என்று கேள்வி கேட்கிறார். இதையடுத்து,ஷிவின் ஆயிஷாவிடம் நான் வந்த போது ஒரு கான்பிடன்ட்டான ஆயிஷாவை பார்த்தோம். ஆனால், என்பது போல கேட்டார். அதற்கு பதிலளித்த ஆயிஷா, அது ஏன் என்று எனக்கே தெரியவில்லை. இந்த கேமில் நான் தோற்றுவிட்டேன் என்று கண்கலங்குகிறார்.

ஜாலியோ ஜிம்கானா
இதையடுத்து, ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம், ராபர்ட் மாஸ்டர் பத்தி என்ன நினைக்கிறீங்க, அவர் உங்ககிட்ட ஏதோ சொல்லவராரே அது உங்களுக்கு தெரிகிறதா என வழிந்து வழிந்து கமலின் முன்பே பேசுகிறார். நேற்றைய எபிசோடில் அட்வைஸ் இன்று ஜாலியோ ஜிம்கானா என ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











