காதல் வராதா...காதல் வராதா..ரச்சிதாவை சுற்றி வரும் ராபர்ட் மாஸ்டர்.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோவில், ரச்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் நேரடியாகவே என்னை பத்தி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டுள்ளார்.
இந்த ப்ரோமோவை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்கள், இத்தனை நாளா ரச்சித்தாவை பார்த்து பார்த்து சைட்டுத்தான் அடிச்சிட்டு இருந்தார். பேட்டி எடுக்கும் டாஸ்கை கொடுத்தால் வெளிப்படையாகவே இப்படி கேட்டுட்டாரே என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
இவர்கள் இருவர் குறித்தும் சோஷியல் மீடியாவில் வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் இந்த ப்ரோமோவும் தற்போது டிராண்டாகி வருகிறது.

ஊக்கம் தரும் நண்பர்கள் தேவை
ப்ரோமோவில் கண்கலங்கிய ஆயிஷாவை பார்த்து வருத்தப்பட்ட ஒரு இணையவாசி, பிபி வீட்டில் இருப்பவர்களில் ஆயிஷா மிகவும் நல்ல மனிதர் போல் தெரிகிறார். தன் தோல்வியை அவள் ஏற்றுக்கொள்வதை கேட்கும் போது வருத்தமாக இருக்கிறது. அவள் தோளில் ஒரு கையை வைத்து, அவளுக்கு ஊக்கம் தரும் நல்ல நண்பர்கள் தேவை என பதிவிட்டுள்ளார்.

என்னைக் கொல்கிறது
தனலட்சுமியின் நிச்சயமற்ற தன்மை. ஆயிஷாவின் கண்கலங்கிய தோல்வி முகம் என்னைக் கொல்கிறது. இந்த சீசன் நன்றாகத் துவங்கி 4வது வாரத்தில் தடம் புரண்டுவிட்டது. இந்தப் பெண்கள் தங்கள் விளையாட்டுக்கு திரும்புவார்கள் என்று நம்புகிறேன். இல்லையென்றால் தயவு செய்து அவர்களை வெளியேற்றுங்கள், நாங்கள் பார்ப்பதை நிறுத்திவிடுகிறோம் என கூறியுள்ளார்.

காதல் வராதா...காதல் வராதா
ராபர்ட் மாஸ்டர் காதல் வராதா... காதல் வராதானு பாட்டு பாடி எதையோ சொல்ல நினைக்கிறார்.. உங்கள் வீடியோ கிளிப்பை பார்க்கும் போது கோவம் வரவில்லை. பிரியங்கா பாசையில் சொன்னா க்யூட்டா இருக்கு..Only for fun.. இருந்தாலும் ரச்சிதாவுக்கு வெளியில் வாழ்க்கை இருக்கு, அவ இமேஜை கெடுக்காதீங்க என்று பதிவிட்டுள்ளார்.

வேறலெவல் கமல் சார்
நேற்றைய எபிசோடில் யாரையும் காயப்படுத்தாமல், அதே நேரம் சொல்லவேண்டியதை போட்டியாளர்களுக்கு புரியும் படி பக்குவமாக , நயமாக எடுத்துரைத்த கமலின் பேச்சு தெவிட்டாமல் ரசிக்கும்படியாக இருந்தது. வேற லெவல்.

குவியும் பாராட்டு
இந்த சீசனில் தான் மக்களின் மன ஓட்டத்திற்கு ஏற்றார்போல் நிகழ்ச்சி செல்கிறது..கமலும் அதைதான் வழி மொழிகிறார். ஒரு வேளை மக்களின் கருத்துகள் அனைத்தும் கவனிக்கபடுகிறதோ? என பதிவிட்டுள்ளார். இது என்னமோ உண்மைதான் மக்கள் என்ன நினைக்கிறார்களே அதை கமல் பேசி வருவதை மக்கள் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











