மைக்கை மூடி பேசுவது..ரகசியம் பேசுவது..விதியை மீறினால்..வெளியில் அனுப்பிடுவேன்..எச்சரித்த கமல்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதியை மீறி மைக்கை மூடி பேசுவது, ரகசியம் பேசினால் நானே ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பி விடுவேன் என்று கமல் எச்சரித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி நான்காவது வாரத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 18 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6ல் இந்த வார நாமினேஷனில் அசீம், விக்ரமன், விஜே கதிரவன், ஆயிஷா,ஷெரினா ஆகியோர் உள்ளனர். இதில், நேற்றைய நிகழ்ச்சியில் அசீம் தனது குணத்தை மாற்றிக்கொண்டார். அவர் மாறவேண்டும் என்பதுதான் என் விருப்பம். அவர் மாறியிருப்பதை நினைத்து நான் பெருமை அடைகிறேன். மக்களும் அசீமிடம் மாற்றத்தை பார்த்து இருக்கிறார்கள் இதனால், இந்த முறை அசீமை காப்பாற்றி உள்ளார்கள் என்றார்.

ஷெரினா எலிமினேட்

ஷெரினா எலிமினேட்

இதையடுத்து, விக்ரமனும் காப்பாற்றப்பட்டதாக கூறினார். தற்போது விஜே கதிரவன், ஆயிஷா,ஷெரினா ஆகியோர் உள்ளனர். இதில், ஷெரினா குறைந்த வாக்குகளை பெற்று இந்த வாரம் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் பொம்மை டாஸ்கின் போது தலையில் அடிபட்டுவிட்டதாக கூறியதால் மக்கள் அவர் மீது அதிருப்தியில் இருந்தனர்.

கோவமா பேசிய கமல்

கோவமா பேசிய கமல்

இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில் கமல்ஹாசன் கொஞ்சம் கோபமாகவே பேசி உள்ளார். அதில், பிக் பாஸ் வீட்டுக்கு வந்து 30 நாள் ஆகிவிட்டது, டாஸ்குக்கு கூப்பிட்டா லேட்டா வரீங்க, இவங்க என்ன செய்ய போறாங்க என்கிற அலட்சியம். இது, நீங்க இந்த நிகழ்ச்சிக்கு செய்யும் உபகாரம் இல்லை.

வெளியில் அனுப்பிவிடுவேன்

வெளியில் அனுப்பிவிடுவேன்

மைக்கை மூடி பேசுவது, ரசியமா பேசுவதும்,எழுதி காட்டுவது, வேறு மொழியில் பேசுவது, நீங்கள் விதிகளை தொடர்ந்து அவமதித்து நடக்கும் போது, தேவைப்பட்டால் நானே உங்களுக்கு ரெட் கார்டு கொடுத்து எலிமினேட் செய்து வெளியில் அனுப்பி விடுவேன் என்று கோபத்துடன் பேசி உள்ளார். கடந்த வாரமே வேறுமொழியில் பேசுவது பற்றி நாளை பேசுவேன் என்று கூறியிருந்தார். ஆனால், அதுபற்றி பேசவில்லை. இதனால், இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவருக்கும் சரியான எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X