ஆயிஷாவை டார்கெட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்...இந்த வாரம் வெளியேறப்போவது யார்?
சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ராமோவில், ஆயிஷாவை பலர் நாமினேட் செய்துள்ளனர்
கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் பேசியதைப் பார்த்து மிரண்டு போன பிக் பாஸ் பார்வையாளர்கள். இந்த வாரம் சனிக்கிழமை எப்போது வரும் என்று காத்திருந்தனர்.
சரியாக 9.30 மணி ஆனதும் அலாரம் அடித்த மாதிரி தொலைக்காட்சி முன்பு அமர்ந்தனர். இந்த வார சனிக்கிழமை எபிசோடு கடந்த வாரம் போல இல்லாமல் சற்று சுமாராகவே இருந்தது.

சுவாரசியமான டாஸ்க்
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமையான நேற்று டிஆர்பி ரேட்டிங்கை எகிறவைக்க போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க்கை கொடுத்தார். அதாவது ஒருத்தர் செலிபிரிட்டியா இருக்கணும், மற்றொருவர் நிருபரா மாறி கேள்வி கேட்கணும். கேள்வி வளவளனு இருக்கக்கூடாது பளிச்சுன்னு இருக்கனும், கேள்வி சுவாரஸ்யமா இல்லைன்னா நான் பெல்லை அடித்துவிடுவேன். பெல் அடித்துவிட்டால் இன்டர்வியூவை நிறுத்திவிட வேண்டும் என்றார்.

சுவாரசியமான கேள்வி
இந்த டாஸ்கில் சுவாரசியமாக இருந்தது ஏடிகே ஷெரினாவிடம் கேட்ட கேள்விதான், தலையில் உண்மையிலே அடிபட்டதா என்று கேட்டு ஷெரினாவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார். ஆனால், இந்த இன்டர்வீயூதான் சுவாரசியமா இருந்தது என்று ஏடிகேவை கமல் பாராட்டினார். இதையடுத்து, ரச்சிதாவை ராபர்ட் மாஸ்டர் வழிந்து கொண்டே கேள்வி கேட்டார். அதே போல ஷிவின் ஆயிஷாவிடம் கேட்ட கேள்வியும் சுவாரசியமாக இருந்தது.

கதறி அழுது ஆயிஷா
இதையடுத்து, இந்த வாரம் ஷெரினா பிக் பாஸ்வீட்டிலிருந்து வெளியேறினார். ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த ஆயிஷா நான் வெளியில் போக வேண்டும் என்று அழுது கொண்டு இருந்த நிலையில், அவரின் தோழி வெளியில் போனதால் கண்ணீர் விட்டு கதறி கதறி அழுதார். வீட்டில் இருப்பவர்கள் எவ்வளவு சமாதானப்படுத்தியும் ஆயிஷா அழுகையை நிறுத்தவில்லை.

டார்கெட் செய்யும் ஹவுஸ்மெட்ஸ்
இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறுகிறது. இதில், மணிகண்டன், ரச்சிதா, விக்ரமன் என அனைவருமே ஆயிஷாவின் பெயரையே நாமினேட் செய்கின்றனர். இதனால், இந்த வாரம் ஆயிஷா வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











