இனிமேல் தினம் சண்டை..கலவரம் தான்..புதிய டாஸ்க்கால் ரணகளமாக போகும் வீடு!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோவில் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கால் நிச்சயம் வீடு ரணகளமாகப் போகிறது என பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்து, மெட்டி ஒலிசாந்தி, அசல் கோலாரு,ஷெரினா வெளியேறி உள்ள நிலையில் வீட்டில் தற்போது 17 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

இன்று திங்கட்கிழமை என்பதால், தலைவர் பதவிக்கான டாஸ்க், நாமினேஷன் ப்ராசஸ் என வீடே சுறுசுறுப்பாக இருந்தது.

ப்ரீ அட்வைஸ்

ப்ரீ அட்வைஸ்

காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், தனலட்சுமி போட்டியாளர்களுக்கு ப்ரீ அட்வைஸ் கொடுக்கிறார். அதாவது, கார்டன் ஏரியாவில் ஒன்று முதல் பத்து வரை இருக்கும் நம்பரில் சிறிய பந்தை தட்டி தட்டி நம்பர் ஒன்றில் இருக்கும் சிறிய ஓட்டையில் விழ செய்ய வேண்டும். பின்னர் அதிலிருக்கும் ஸ்கிராட்ச் கார்டை ஸ்கிராட்ச் செய்து அதில் ஜெயிக்கும் போட்டியாளர் சக போட்டியாளர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் டாஸ்கில் தனம் வெற்றி பெற்று போட்டியாளர்களுக்கு ப்ரீ அட்வைஸ் கொடுத்தார்.

ஆயிஷாதான் டார்கெட்

ஆயிஷாதான் டார்கெட்

இதையடுத்து, பிற்பகலில் வெளியான இரண்டாவது ப்ரோமோவில், நாமினேஷன் ப்ராசஸ் நடக்கிறது. இதில் மணிகண்டன், ரச்சிதா, விக்ரமன் என அனைவருமே ஆயிஷாவின் பெயரையே நாமினேட் செய்கின்றனர். இதனால், இந்த வாரம் ஆயிஷா வெளியேறே அதிக வாய்ப்பு உள்ளது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா

கண்ணா லட்டு தின்ன ஆசையா

இதையடுத்து, தற்போது மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், அசீம் டாஸ்கின் விதிமுறையை படிக்கிறார். இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்கிற்காக பிக் பாஸ் வீடு ஸ்வீட் ஃபேக்டரியாக மாற உள்ளது. இதில் அமுதவாணன் தனது டீமின் ஸ்வீட் ஃபேக்டரியின் பெயர் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்கிறார். அசீம் உள்ள டீம்மின் பெயர் தேன் அடை என்கிறார்.

சண்டைக்கு பஞ்சமே இருக்காது

சண்டைக்கு பஞ்சமே இருக்காது

இதில் இரண்டு ஸ்வீட் ஃபேக்டரிகளை சேர்ந்தவர்களும் பலகாரங்களை ஆர்டர் எடுத்து அனுப்ப வேண்டும். இந்த ஸ்வீட் ஃபேக்டரி 24 மணி நேரமும் செயல்படும் ஆனால், முக்கியமான ஒன்று ஃபேக்டரியில் உள்ள பொருட்கள் மற்றும் கல்லாப் பெட்டியை பாதுகாக்க வேண்டியது ஸ்வீட் பேக்டரி உரிமையாளரின் பொறுப்பு என்றும் ஒரு ட்விஸ்டை வைக்கிறார். இதனால், கல்லாப்பெட்டியை பாத்திரமாக வைக்கவில்லை என்றால், பணத்தை திருடிக்கொள்ளலாம் என்பதால், இனி வீட்டில் சண்டைக்கு பஞ்சமே இருக்காது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X