மீண்டும் முருங்கை மரம் ஏறிய அசீம்..வம்புக்கு இழுத்த மகேஸ்வரி..பிக் பாஸ் வீட்டில் அக்கப்போரு!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவில், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக மகேஸ்வரியிடம் சண்டை போட்டுள்ளார்.
பிக் பாஸ் வீடு நேற்று நாமினேஷன்,தலைவர் பதவிக்கான டாஸ்க் என வீடே சுறுசுறுப்பாக இருந்தது. தலைவர் பதவிக்கான போட்டியில் அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், மைனா ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த டாஸ்கில் மைனா வெற்றி பெற்று இந்த வாரத்தின் கேப்டன் ஆனார்.

இந்த வார டாஸ்க்
பிக் பாஸ் வீடு இன்று முதல் லக்ஸரி பட்ஜெட் டாஸ்கிற்காக ஸ்வீட் ஃபேக்டரியாக மாறி உள்ளது. இதில் அமுதவாணன், ஜனனி, தனலட்சுமி,ஷிவின்,ரச்சிதா, ராபர்ட் மாஸ்டர், ராம்,ஆயிஷா ஆகியோர் கண்ணா லட்டு தின்ன ஆசையா ஸ்வீட் ஃபேக்டரியின் உரிமையாளராக உள்ளனர். விக்ரமன் தேன் அடை ஸ்வீட் ஃபேக்டரியின் உரிமையாளராக இருக்கிறார்.

ஸ்வீட் ஃபேக்டரி
இரண்டு ஸ்வீட் ஃபேக்டரிகளை சேர்ந்தவர்களும் பலகாரங்களை ஆர்டர் எடுத்து அனுப்ப வேண்டும். இந்த ஸ்வீட் ஃபேக்டரி 24 மணி நேரமும் செயல்படும். ஃபேக்டரியில் உள்ள பொருட்கள் மற்றும் கல்லாப் பெட்டியை ஸ்வீட் பேக்டரி உரிமையாளர் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் டாஸ்க்.

ஆத்திரத்தில் கத்திய அசீம்
தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவில், மகேஸ்வரி விக்ரமிடம் மேனேஜராக நான் என் கருத்தை சொன்னேன் அதை நீங்க கேட்டு இருக்கலாம் என்கிறார். அப்போது, பக்கத்தில் இருந்த அசீம், ஓனர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கத்துகிறார். இதைக்கேட்ட, மகேஸ்வரி நான் உங்ககிட்ட பேசவில்லை என்று இருவருக்கும் இடையே மாறி மாறி கருத்து மோதல்கள் வருகிறது. அப்போது, விக்ரமன் அசீம் எதுக்கு இவ்வளவு சத்தமா பேசுறீங்க அமைதியாக இருங்க என்கிறார்.

முருங்கை மரம் ஏறிய அசீம்
இதையடுத்து அசீம், இந்த டீமிலிருந்து நான் விலகுகிறேன் வேறு யாரையாவது வைத்து பார்த்துக்கொள்ளுங்கள் என்று வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல கத்துகிறார். இந்த வாரம் தான் கமல் இவரை பாராட்டினார் அதற்குள் இப்படியா என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











