பிக் பாஸ் சீசன் 6..யாருக்கு அதிகம் சம்பளம்...யாருக்கு கம்மி..முழுவிவரம் இதோ!

சென்னை : அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த வாரம் ஆட்டம் பாட்டத்துடன் பிரமாண்டமாக தொடங்கியது. தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது.

இந்த முறை நிகழ்ச்சி ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல் கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துள்ள பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6ல் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் இருந்தனர்.

21 போட்டியாளர்கள்

21 போட்டியாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் கலந்து கொள்ளாமல் இருந்த மைனா நந்தினி இந்த கடந்த வாரம் வைல்டு கார்டு ரவுண்டின் மூலம் வீட்டில் நுழைந்துள்ளார். இதையடுத்து பிக் பாஸ் வீட்டில் தற்போது 21 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வாரம் முதல் நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கி உள்ளதால் இனி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் வெளியேறுவார்கள்.

போட்டியாளர்களின் சம்பளம்

போட்டியாளர்களின் சம்பளம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கமலஹாசனுக்கு 75 கோடி வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதே போல, டிக் டாக் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தனலட்சுமிக்கு ஒரு நாளைக்கு 16 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது.

யாருக்கு அதிகம்

யாருக்கு அதிகம்

நிவாஷினிக்கு 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாயும், மாடல் அழகியான ஷெரினுக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாயும், விஜே கதிரவனுக்கு 22 ஆயிரம் ரூபாயும், விஜே மகேஷ்வரிக்கு 23 ஆயிரம் ரூபாயும், அமுதவாணனுக்கு 27 ரூபாயும், விக்ரமனுக்கு 17 ஆயிரம் ரூபாயும், மெட்டி ஒலி சாந்திக்கு 26 ஆயிரம் ரூபாயும், இலங்கை பெண் ஜனனிக்கு 21 ஆயிரம் மூதல் 26 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

யாருக்கு கம்மி

யாருக்கு கம்மி

சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த,ரச்சித்தா மகாலட்சுமிக்கு 28 ஆயிரம் ரூபாயும், சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மைனா நந்தினி. இவர் படங்களிலும் நடித்து இருக்கிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 20 முதல் 25 ஆயிரம் ரூபாயவும் ஜிபி முத்துக்கு 18 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X