For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிக் பாஸ்க்கு அடுத்த பாலாஜி முருகதாஸ் ரெடியா? செம ஹேண்ட்ஸமா இருக்காரே யாரு இந்த ராம் ராமசாமி!

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 வரும் ஞாயிறு முதல் ஆரம்பமாகிறது. பிக் பாஸ் துவக்க விழா நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு இன்று இவிபி ஸ்டூடியோவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  பிக் பாஸ் வீட்டின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், வீட்டுக்குள் செல்ல உள்ள சில உறுதியான போட்டியாளர்கள் பெயர்கள் எல்லாம் ஒவ்வொன்றாக கசியத் தொடங்கி உள்ளன.

  திருநங்கை போட்டியாளர் ஷிவின் கணேசன் இந்த முறை போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார் என்கிற தகவல் சமீபத்தில் வெளியான நிலையில், பாலாஜி முருகதாஸ் மாதிரி ஒரு செம ஹேண்ட்ஸம் ஆன போட்டியாளராக ராம் ராமசாமி கலக்கப் போகிறார் என்கிற ஹாட் அப்டேட்டும் கசிந்துள்ளது.

  Bigg Boss Tamil 6 Exclusive: அடேங்கப்பா.. பிக் பாஸ் சீசன் 6 வீடு எப்படி இருக்குன்னு பாருங்க!Bigg Boss Tamil 6 Exclusive: அடேங்கப்பா.. பிக் பாஸ் சீசன் 6 வீடு எப்படி இருக்குன்னு பாருங்க!

  பிரம்மாண்ட பிக் பாஸ் வீடு

  பிரம்மாண்ட பிக் பாஸ் வீடு

  பிக் பாஸ் வீட்டை சுற்றிப் பார்க்க மீடியாக்களுக்கு அனுமதி கிடைத்த நிலையில், ஏகப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் ஆன பிக் பாஸ் வீட்டுப் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த முறை போட்டியாளர்களை சில் பண்ண நீச்சல் குளத்தையும் திறந்து வைத்துள்ளனர் என்றே தெரிகிறது. தண்ணீர் நிரப்பப்பட்ட நீச்சல் குளம் அருகே இரண்டு சன் பாத் சேர்களும் போடப்பட்டு இருந்தன.

  இவங்களாம் கன்ஃபார்மா

  இவங்களாம் கன்ஃபார்மா

  நடன இயக்குநர் ராபர்ட், விஜய் டிவி சீரியல் நடிகை ரக்சிதா, நடிகை விசித்ரா, சென்னையை சேர்ந்த மாடல் அழகி ஷெரினா, இலங்கை ஆங்கர் ஜனனி என பல பிரபலங்கள் இந்த முறை பிக் பாஸ் சீசன் 6 வீட்டை அலங்கரிக்க உள்ளனர். மேலும், விஜய் டிவியை சேர்ந்த பலரது பெயர்களும் அடிபட்டு வருகின்றன.

  இவரு வந்தா சூப்பரா இருக்குமே

  இவரு வந்தா சூப்பரா இருக்குமே

  விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்திய "சக்கு சக்கு வத்திக்குச்சி" பாடல் மீது மீண்டும் டிரெண்டானவர் நடிகர் மன்சூர் அலி கான். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6ல் அவரை போட்டியாளராக உள்ளே கொண்டு வர பிக் பாஸ் டீம் தீவிர முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  திருநங்கை போட்டியாளர்

  திருநங்கை போட்டியாளர்

  பிக் பாஸ் சீசன் 5ல் திருநங்கை போட்டியாளராக நமீதா மாரிமுத்து கலந்து கொண்டார். ஆனால், ஒரு வாரத்திற்குள்ளே அவர் அதிரடியாக வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், இந்த சீசனிலும் ஒரு திருநங்கை போட்டியாளரை விஜய் டிவி பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப போகிறதாம். சிவின் கணேசன் எனும் அந்த போட்டியாளர் தனது அம்மாவின் பாசத்தை அடையவே இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற போவதாக கூறப்படுகிறது.

  ராம் ராமசாமி

  ராம் ராமசாமி

  ராம் ராம்சாமி என பெயரே வித்தியாசமாக ஸ்டைலாக இருப்பது போல், ஆளும் செம ஹேண்ட்ஸம் ஆகவே இருக்கிறார். இவரும் இந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொள்ளப் போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட போட்டோஷூட்களை போட்டு ராம் ராமசாமி தெறிக்கவிட்டுள்ளார்.

  பாலாஜி முருகதாஸா

  பாலாஜி முருகதாஸா

  இவரை பற்றி அறிந்ததும் அடுத்த பாலாஜி முருகதாஸா இருப்பாரா? அல்லது நிரூப்பாக இருப்பாரா? என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. முன்னாள் டிவி ஹோஸ்ட்டாக இருந்த ராம் ராமசாமி பாடவும் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண் ரசிகைகளை உடனடியாக கவர்ந்து விடுவார் என எதிர்பார்க்கப்படும் இவர் கடைசி வரை பிக் பாஸ் வீட்டில் பயணிக்கவும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கு என்கின்றனர்.

  English summary
  Model and former Tv host Ram Ramasamy expected in Bigg Boss Tamil Season 6 confirmed contestant list. Already Transgender Sivin Ganesan entered the show details leaked in social media. Ram Ramasamy looks like Balaji Murugadoss comments also trending.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X