யார் வூட்ல பார்ட்டி, எங்க வூட்ல பார்ட்டி.. வி.ஜே.மகேஸ்வரி கொடுத்த விருந்து.. அவங்க மட்டும் மிஸ்ஸிங்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்களுக்கு விஜே மகேஸ்வரி வீட்டில் பார்ட்டி கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 6, அக்டோபர் 9ந் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில், அசீம், விக்ரம், ஜிபி முத்து, ஏடிகே, விஜே மகேஸ்வரி, அசல் கோலாறு, ஷிவின், ரக்ஷிதா, ஷெரீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் அசீம் டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு ரூ.50 லட்சத்துக்காண காசோலை, பிக்பாஸ் டிராபி மற்றும் கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாகும். அதிலும் கடைசியாக ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக அரசியல் பிரமுகம் விக்ரமன் கலந்து கொண்டார். 106 நாட்கள் ஒளிப்பரப்பான இந்த நிகழ்ச்சியில் அசீம் அனைத்துப் போட்டியாளர்களிடமும் வரம்பு மீறி பேசி சண்டை போட்டார். அசீமின் செயலை கமல்ஹாசனே பலமுறை கண்டித்துள்ளார்.

கொந்தளித்த ரசிகர்கள்

கொந்தளித்த ரசிகர்கள்

இறுதிப்போட்டியில் விக்ரமன், அசீம், ஷிவின் மூன்று பேரும் நிற்க விக்ரமன் அல்லது ஷிவின் ஆகிய இருவரில் ஒருவர்தான் வெற்றி பெறுவார்கள் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அசீம் வெற்றி பெற்றதால், பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சீசனை தொடக்கம் முதல் பார்த்த ரசிகர்கள் விஜய் தொலைக்காட்சியை புறக்கணிக்க வேண்டும் என்று கொந்தளித்து இணையத்தில் படுமோசமாக விமர்சித்தனர்.

விஜே மகேஸ்வரி வீட்டில் பார்ட்டி

விஜே மகேஸ்வரி வீட்டில் பார்ட்டி

இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகும் இந்த சர்ச்சை தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் இரு பிரிவுகளாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6ன் போட்டியாளர்களில் ஒருவரான விஜே மகேஸ்வரி, சக போட்டியாளர்களுக்கு தனது வீட்டில் பார்ட்டி வைத்துள்ளார். இந்த பார்ட்டியில், ரக்ஷிதா, ஷிவின், விக்ரமன், ஷெரினா, ராம், ஏ.டி.கே, அசல் கோலாறு ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

அவங்க மட்டும் இல்லை

அவங்க மட்டும் இல்லை

இந்த புகைப்படத்தை விஜே மகேஸ்வரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பார்ட்டியில் விஜே மகேஸ்வரியின் பரம எதிரியான ஆசீம் கலந்து கொள்ளவில்லை. அதே போல அசீமின் அன்பு தங்கையாக வலம் வரும் தனலட்சுமியும் கலந்து கொள்ளவில்லை. பிக் பாஸ் வீட்டில் இருந்த போது, சண்டைக்கோழியாக இருந்த விஜே மகேஸ்வரி, அசீம் செய்த பல தவறுகளை சுட்டிக்காட்டி நேருக்கு நேர் சண்டை போட்டார். நிகழ்ச்சி முடிந்த பிறகும் இருவரும் இணையத்தின் வழியாக சண்டை போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X