தப்பு கணக்கு போட்ட அசீம், கதிர்... மைனா, அமுதாவுக்கு செகண்ட் சான்ஸ் கொடுத்த பிக் பாஸ்

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது.
விக்ரமன், அசீம், ஷிவின், மைனா, கதிர், அமுதவாணன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றிருந்தனர்.
ஆனால், நேற்று பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பண மூட்டையுடன் கதிர் போட்டியில் இருந்து வெளியேறினார்.
விக்ரமன் அல்லது அசீம் தான் டைட்டில் வெல்ல வாய்ப்பிருக்கும் நிலையில் மற்ற போட்டியாளர்களு இரண்டாவது முறையாக பணப் பெட்டியுடன் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் பிக் பாஸ்.

 பரபரப்பில் பிக் பாஸ்

பரபரப்பில் பிக் பாஸ்

அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் 6 பேர் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றனர். விக்ரமன், அசீம், ஷிவின், மைனா, அமுதவாணன், கதிர் இவர்களில் யார் டைட்டில் வெல்வார் என எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதேநேரம் விக்ரமன் - அசீம் இருவருக்கும் இடையே தான் கடும் போட்டி காணப்படுகிறது.

 வெளியேறிய கதிர்

வெளியேறிய கதிர்

பிக் பாஸ் இறுதி வாரம் என்பதால் ஏற்கனவே எவிக்சன் செய்யப்பட்ட ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் மீண்டும் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர். இந்நிலையில், ஃபைனல் ரேஸில் இருக்கும் 6 போட்டியாளர்களுக்கும் பிக் பாஸ் பண மூட்டை வாய்ப்புக் கொடுத்தார். கார்டன் ஏரியாவில் பண மூட்டை கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் இருக்கும் பணத்துடன் வெளியேற வாய்ப்பு கொடுக்கப்பட்டது. பண மதிப்பு கூடிக் கொண்டே இருந்த நிலையில் 3 லட்சம் ரூபாயுடன் பண மூட்டையை எடுத்துக் கொண்டார் கதிர். பண மதிப்பு உயரும் என ஹவுஸ்மேட்ஸ் எவ்வளவு கூறியும் அதனை பொருட்படுத்தாமல் எனக்கு பணம் முக்கியமில்லை என வெளியேறினார் கதிர்.

 அசீம் - கதிர் தப்புக் கணக்கு

அசீம் - கதிர் தப்புக் கணக்கு

மீண்டும் உள்ளே வந்த ஹவுஸ்மேட்ஸ் விக்ரமன் அல்லது அசீம் இருவரில் ஒருவர் தான் டைட்டில் வெல்ல வாய்ப்பு என மற்ற போட்டியாளர்களிடம் கூறி வந்தனர். இதனால் கதிர் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முடிவில் தான் இருந்துள்ளார். அசீமும் அதனை சரியாக பயன்படுத்தி, கதிரை வெளியேற்றி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என திட்டமிடுகிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். கதிர் வெளியேறும் முன்பு மணிகண்டன் அவரிடம் சென்று அசீம்க்கு சப்போர்ட் பண்ணு என ரகசியமாக கூறினார்.

 அமுதா - மைனாவுக்கு செகண்ட் சாய்ஸ்

அமுதா - மைனாவுக்கு செகண்ட் சாய்ஸ்

அதுமட்டும் இல்லாமல் பணமதிப்பு கூடும் என காத்திருந்த மைனாவும் அமுதாவும் கதிரின் முடிவால் அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஏமாற்றத்தை அமுதா வெளிப்படையாக காட்டாவில்லை என்றாலும் அவரது முகத்தில் தெரிந்தது. இந்நிலையில், தான் இன்றைய தினத்துக்கான மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. அதில் மீண்டும் கார்டன் ஏரியாவில் பணப் பெட்டி உள்ளது. நேற்று கதிர் எடுத்துச் சென்ற 3 லட்சத்தில் இருந்து இன்றைக்கு பணமதிப்பு உயரும். இறுதிப் போட்டியாளர்களில் ஒருவர் எடுத்துக்கொள்ளலாம் என பிக் பாஸ் ஆசை காட்டுகிறார். இது மைனாவுக்கும் அமுதாவுக்கும் பிக் பாஸ் கொடுக்கும் செகண்ட் சான்ஸ் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். பண மதிப்பும் கூடிக் கொண்டே இருக்க, அமுதாவும் மைனாவும் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என இன்று இரவு தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X