பிக் பாஸ் சீசன் 6ன் முதல் எவிக்ஷன்..கார்டுடன் வந்த கமல்.. வெளியானது முதல் ப்ரோமா!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், இந்த சீசனின் முதல் எவிக்ஷன் கார்டுடன் கமல் என்ட்ரி கொடுத்துள்ளார்.
கடந்த அக்டோபர் 9ம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானது. 2 வாரங்கள் வீட்டில் போட்டியாளர்கள் ஜாலியாகவும், சண்டை போட்டும் சுவாரஸ்யத்தை அதிகரித்து வருகின்றனர்.
அசீம், ராம் ராமசாமி, தனலட்சுமி, ரச்சிதா, சாந்தி, குயின்ஸி, விக்ரமன், மகேஸ்வரி, ஆயிஷா, நிவாஷினி, சிவின் கணேஷ் மற்றும் ஷெரினா ஆகிய 12 பேர் பெயர்கள் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அசீமுக்கு ரெட் கார்ட்
வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பஞ்சாயத்தை தீர்த்துவைத்து சரியான சவுக்கடிகளை கமல் கொடுத்து வருகிறார். இதில் நேற்று அசீம் வீட்டில் ஆயிஷாவிடமும், விக்ரமனிடத்திலும் தவறான வார்த்தையால் திட்டியதற்கு அவருக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்புவார் என்று பார்த்தால், அவரை மக்கள் மன்னித்து விட்டதாக கூறினார்.

ஜிபி முத்து வெளியேறினார்
அது மட்டும் இல்லாமல், ஜிபி முத்து வீட்டிற்கு போக வேண்டும் என்று கேட்டு அழுதார், பையனிடம் பேச வேண்டும் என்றார். அவரை ஒருமுறையாவது பையனிடம் பேசவைத்து இருக்கலாம், அவரை சமாதானப்படுத்தி இருக்கலாம். அதைவிட்டு ஜிபி முத்து வெளியே அனுப்பிவிட்டீர்களே என ரசிகர்கள் கமல் மீது கோபத்தில் உள்ளனர்.

இந்த சீசனின் முதல் எவிக்ஷன்
இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், பிளாக் அண்ட் பிளாக் பட்டுவேட்டி சண்டையில் சும்மா கிளாசிக் லுக்கில் நடந்து வரும் கமல், எவிக்ஷனுக்கான நேரம் வந்து விட்டது... இதில் எஞ்சி இருப்பது யார் யார்.. இந்த சீசனின் முதல் எவிக்ஷன் என்று கார்டை காட்டுகிறார்.

வெளியேறுவது யார்
12 போட்டியாளர்களின் பெயர் நாமினேஷன் லிஸ்டில் இருந்த நிலையில் நேற்று, விக்ரமன், ரச்சிதா மகாலட்சுமி,ஆயிஷா,குயின்ஸி ஆகியோர் எவிக்ஷனிலிருந்து காப்பாற்றப்பட்ட நிலையில், அசீம், ராம் ராமசாமி, தனலட்சுமி, சாந்தி, மகேஸ்வரி, நிவாஷினி, ஷிவின் கணேஷ் ஆகியோரின் பெயர் நாமினேஷனில் உள்ளது. இதில், சாந்தி வெளியே அனுப்பப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











