நீங்க பிக் பாஸ் இல்லை.. திருநங்கை போட்டியாளர் சிவினுக்கும் விஜே மகேஸ்வரிக்கும் வெடித்தது மோதல்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் நாளில் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று தான் ஆரம்பிக்கும். ஆனால், அடுத்த நாளே, நாமினேஷனுக்கு பிறகு குழாயடி சண்டை வெடிக்க ஆரம்பித்து விடும்.
என்னடா இன்னும் பிக் பாஸ் வீட்டில் பஞ்சாயத்து ஸ்டார்ட் ஆகவே இல்லையே என்பவர்களுக்கு இன்றைய இரண்டாவது புரமோவிலேயே விஜே மகேஸ்வரிக்கும் திருநங்கை போட்டியாளர் சிவின் கணேசனுக்கு சண்டை ஸ்டார்ட் ஆகி விட்டதை பார்க்க முடிகிறது.
இரவு வரை அதற்கு வெயிட் பண்ணாமல் இப்பவே டிஸ்னி ஹாட்ஸ்டாரை போட்டும் ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

ஆட ஆரம்பித்த மகேஷ்வரி
கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக ஒரே ஒரு சீனுக்கு வந்த விஜே மகேஸ்வரி பாத்ரூமில் அமுதவாணனை பயமுறுத்துவதும், பஸரை முதல் ஆளாக அடித்து பர்ஃபார்ம் பண்ணுவதும், ஜிபி முத்து ஜிப் போடல என்பதை சொல்வதுமாக ஆரம்பத்திலேயே கேமரா கண்களுக்கு தெரியும் படி விளையாட ஆரம்பித்துள்ளார். தற்போது சண்டை புரமோவிலும் இடம்பிடித்துள்ளார்.

நீங்க என்ன பிக் பாஸா
ஷிவானி நாராயணுக்கு ஜோடியாக சீரியலில் நடித்த நடிகர் அசீம் பிக் பாஸ் சீசன் 4 முதல் வருவார் என எதிர்பார்க்கப்பட்டு கடைசியாக சீசன் 6க்கு வந்து சேர்ந்துள்ளார். டீ போடுவது குறித்து ஆரம்பித்த பிரச்சனை காரணமாக அவருக்கும் மகேஸ்வரிக்கும் ஆரம்பத்திலேயே முட்டிக் கொள்ள, நீங்க என்ன பிக் பாஸா? பிக் பாஸ் மாதிரி எல்லாம் பேசக் கூடாது என புரமோவில் எகிறுகிறார்.

திருநங்கை சிவின்
டீ, காபி போடுவது குறித்தும், போட்டியாளர்கள் எப்போது டீ குடிக்க வேண்டும் என்பது குறித்தும் சிவின் கணேசன் சொல்லி வரும் நிலையில், சாந்தி, விஜே மகேஸ்வரி உள்ளிட்டோர் இடையே கேள்விகளை கிளப்ப கடுப்பாகி விடுகிறார் திருநங்கை போட்டியாளர் சிவின் கணேசன். நேத்து வர எல்லாரும் சாந்தமா தானே இருந்தீங்க, இன்னைக்கு ஏன் சந்திரமுகியா மாறிவிட்டீங்க, மேலிடத்து உத்தரவோ என நெட்டிசன்கள் நக்கலடித்து வருகின்றனர்.

ஸ்டார்ட் ஆன சண்டை
கொஞ்சம் கடைச் வரைக்கும் பேசி முடிக்கிற வரைக்கும் அமைதியா இருக்க முடியாதா என கேள்வி எழுப்பிய விஜே மகேஸ்வரியை பார்த்து ஆத்திரத்தில் கத்தி சண்டை போட ஆரம்பித்து விட்டார் சிவின் கணேசன். இன்னைக்கு விஜய் டிவியில் வரப்போற எபிசோடு பயங்கரமாக இருக்கும் என்றும் இப்பவே இந்த காட்சிகள் ஹாட்ஸ்டாரில் வந்துடுமே என்று ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு பார்க்க முற்பட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











