மீண்டும் வாங்கிக் கட்டிக்கொள்ளும் அசீம்..வறுத்தெடுத்த போட்டியாளர்கள்!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க் முடிவடைந்த பின், சண்டை, விவாதம் என அனைத்தும் ஓய்ந்து வெள்ளிக்கிழமை வீடே அமைதியாக இருந்தது.
வாரம் முழுவதும் சண்டை போடுவது வெள்ளிக்கிழமை அனைவரும் அமைதியாக இருப்பதும், ஒவ்வொரு சீசனிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால், எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு முதல் இரண்டு வாரத்திலேயே இந்த சீசனில் தான் வீட்டிற்குள் சும்மா அனல் தெறிக்கிறது. இதனால்,பிக் பாஸ் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 6
பொம்மை டாஸ்க் ஆரம்பித்த நாள் முதலே பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் மாறி மாறி சண்டை போட்டு கொண்டனர். போட்டியாளரான அசீம் தொடர்ந்து பல போட்டியாளர்களிடம் வாக்குவாதத்திலும் சண்டையிலும் ஈடுபட்டார். ஷிவின் மற்றும் அமுதவாணனை பார்த்து மாறி மாறி கேலி செய்தார்.

குறும்படம்
ஷெரினாவை தனலட்சுமி தள்ளி விட்டதாக அசீம் உறுதியாக கூறி வந்த நிலையில் இதுகுறித்து மற்ற போட்டியாளர்களிடம் அதிக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். இதையடுத்து,நேற்று குறும்படத்தை போட்டு தனலட்சுமி தள்ளிவிடவில்லை என்பதை அனைவருக்கும் காட்டினார். இதையடுத்து அசீமை சும்மா வறுத்தெடுத்தார்.

தனக்கென்று சொந்த யோசனை இல்லை
நேற்றே அசீமை வச்சு செய்த நம்ம ஆழ்வார் பேட்டை ஆண்டவர் இன்றும், அசீமை டார்கெட் செய்துள்ளது தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் தெரிகிறது. அதில், தனக்கென்று சொந்தமாக யோசனை இல்லை என்று நீங்கள் நினைக்கும் நபர் யார் என கமல் கேட்கிறார். இதற்கு, அசீம் ராபர்ட் மாஸ்டர், அவர் லைட்டா இருக்கிறார்...ஆனால் ஸ்விச் அமுதுவாணன் போடுகிறார் என்றார்.

பாவம் அசீம்
இதையடுத்து, பேசும் ராபர்ட் மாஸ்டர் நான் அனைவர் இடத்திலும் பேசுவேன். ஆனால், அசீமிடம் பேசமாட்டேன் ஏன் என்றால், அந்த துப்பாக்கி என் மீது திரும்பிவிடுமோ என்ற பயம் எனக்கு, அப்புறம் அசிங்கமாகிவிடும் என்பதால், ஹாய் டார்லிங், எப்படி இருக்கீங்க, சாப்டீங்களா என்பதோடு பேச்சை நிறுத்திவிடுவேன் என்றார். நேற்று தான் அசீமை கமல் வறுத்து எடுத்தார் என்றால், இன்று மொத்த போட்டியாளர்களும் அசீமை வச்சி செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











