துப்பிக்கோ...தொடச்சுக்குவேன்...அசீமை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில், தனக்கென்று சொந்தமாக யோசனை இல்லை என்று நீங்கள் நினைக்கும் நபர் யார் என கமல் கேட்கிறார்.
இந்த வீட்டில் ராபர்ட் மாஸ்டர் தான், அமுதுவாணனுடைய யோசனையை கேட்டு நடக்கின்றார் என்றார்.
இந்த ப்ரோமோவிலும், அசீம் வழக்கம் போல அனைத்தும் தெரிந்த ஞானி போல பேசுவதைப் பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி திட்டி வருகின்றனர்.

துப்பிக்கோ...தொடச்சுக்குவேன்
நேற்று கமல்ஹாசன் அசீமை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலமாக பேசிவிட்டார். கடந்த வாரம், தானாக முன்வந்து ரெட் கார்டை எடுத்து சீன் போட்டு கமல்ஹாசனை ஆஃப் செய்த அசீமை, கதறி அழாத குறையாக வெளுத்துவிட்டார். அப்படி இருந்தும், இன்றைய ப்ரோமோவிலும் அசீம் பெரிய லெஜண்ட் போல பேசியதைப் பார்த்து கடுப்பான நெட்டிசன் ஒருவர், அசீமின் போட்டோவை போட்டு துப்பிக்கோ...தொடச்சுக்குவேன் கேசு.. என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

இன்னும் இரண்டு நாளைக்கு அசீம்தான்
இன்னைக்கு இரண்டு ப்ரேமோவிலும் அசீம் தான் அடிக்கிறாங்க, இன்னைக்கும் கமல் வறுத்தெடுக்க போறாரு இவன் பண்ணதுக்கு ரெண்டு நாளைக்கும் தெளிய தெளிய வச்சு அடிக்குறானுங்க இவன் பேசுன பேச்சுக்கு இன்னும் ரெண்டு வாரத்துக்கு அடிக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

இந்த கேள்வியை கேளுங்கள்
இரண்டாவது ப்ரோமோவை பார்த்து டென்ஷனான ஒரு ரசிகர், இந்த கேள்வியை விட ஆளுக்கு ரெண்டு மிக்சர் பொட்டலத்தை கையில கொடுத்து இதை யாருக்கு கொடுப்பிங்கன்னு கேளுங்க கமல் சார் ஏகபட்ட பேர் சிக்குவாங்க என பதிவிட்டுள்ளார்

சாட்டையடி
ராபர்ட் மாஸ்டர் நான், அவன் கிட்ட பேசினா மரியாதை போயிடும் அதனால் என் மரியாதையை காப்பாத்திக்கிறேன் என கூறியுள்ளதை சுட்டிக்காட்டி உள்ள ஒரு இணைவாசி, அசீமுக்கு திரும்புற இடமெல்லாம் சாட்டையடி என பதிவிட்டுள்ளார்.

கண்டிப்பு, அறிவுரை, நக்கல்
நேற்றைய எபிசோடை பார்த்து மிரண்டு போன ஒரு நெட்டிசன், கண்டிப்பு, அறிவுரை, எச்சரிக்கை, நக்கல், நையாண்டி, சுவாரஸ்யம், பதிலடி, பாடம் புகட்டுதல் இது எல்லாத்தையும் ஒரு ஷோல, ஒரே ஒரு ஆளா நின்னுகிட்டு அசால்ட்டா செய்வதெல்லாம் அசாத்தியமான விஷயம். ஆனா, அதை இவரு கேஷூவலா பண்ணுவாரு. ஏனா, இவரு கமல்ஹாசன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











