குயின்ஸி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜனனி..அதெல்லாம் ஒரு பிரச்சனையா?
சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் குயின்ஸி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார் ஜனனி.
காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் அசீமுக்கும் தனலட்சுமிக்கும் இடையே சண்டை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர். இதனால், வீடே போர்க்களமாக மாறியது.
தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவிலும், குயின்சியும் ஜனனியும் சண்டை போட்டுக்கொள்கின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தை கடந்து நான்காவது வாரத்தில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தினமும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. 21 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், ஜி பி முத்து, மெட்டி ஒலி சாந்தி , அசல் கோலார் வெளியேறி 18 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கிறார்கள்.

குயின்சி காலில் விழுந்த ஜனனி
இந்நிலையில், இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் குயின்ஸி, அம்மா, அப்பா, தம்பிக்கூட என் டவலை தொட மாட்டார்கள் என்கிறார். இதையடுத்து, குயின்ஸி என்னை மன்னித்துவிடு என்று கூறி விட்டு, குயின்ஸியின் காலில் விழுகிறார் ஜனனி. அதெல்லாம் ஒன்னும் இல்லை என் டிரஸ், டவலை எடுத்ததும் ஷாக்காகிவிட்டேன் என்று சொல்கிறார் குயின்ஸி. இதையடுத்து, கையில் இருந்த டீ கப்பை கோபத்தில் தூக்கி எறிகிறார் ஜனனி. தெரியாமல் எடுத்துவிட்டேன் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறேன் என்று ஆத்திரத்தில் கத்துகிறார்.

இதெல்லாம் ஒரு சண்டையா
இந்த ப்ரோமோவைப் பார்த்த இணையவாசிகள் இதெல்லாம் ஒரு சண்டையா என்றும், இந்த பொண்ணுக்கு கோவபடக்கூட தெரியவில்லை என்றும், கோவமா பேசினால்தான் ப்ரோமோவில் வரமுடியும் என்று ஜனனிக்கு நன்றாக தெரியும் போல இதனால், கோவமா இருப்பது போல சீன் போடுகிறார் என ரசிகர்கள் கிண்டலடிக்கின்றனர்.

காலையிலே சண்டை
முன்னதாக காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் நேற்று நடந்த டிவி டாஸ்கின் போது அசீமுக்கும் மகேஸ்வரிக்கும் சிறு வாங்குவாதம் ஏற்பட்டது. அந்த பிரச்சனை இன்று பூதாகரமாகி பெரிய வாக்குவாதமாகி உள்ளது. வழக்கமாக வெள்ளிக்கிழமை வந்தால் அமைதியாக இருப்பதாக சீன் போடும் போட்டியாளர்கள் இன்று கொஞ்சம் ஓவராக சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











