கமல் பாராட்டி இருக்கக்கூடாது..தனலட்சுமிக்கு ஓவர் தலைக்கணம்..விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை : பிக் பாஸ் வீட்டில், இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோவில், டிஆர்பி டாக்கில் மிகவும் மோசமாக விளையாடியது ராம் என்று தனலட்சுமி கூறினார்.

மேலும், எதற்கு எடுத்தாலும், கண் பிரச்சனையை காரணமாக சொல்லி எஸ்கேப்பாகிறார் என்று கூறினார். இதனால், டென்ஷனான ராம், நான் வோஸ்ட் என்று சொல்லு ஆனால், ஹெல்த்தைப்பற்றி பேசாதே என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த ப்ரோமோவை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்கள் ஏராளமான விமர்சனங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

கமல் பாராட்டி இருக்கக்கூடாது

கமல் பாராட்டி இருக்கக்கூடாது

கடந்த வாரம், தனலட்சுமி தள்ளிவிடவில்லை என்று குறும்படம் போட்டு காட்டிய கமல்ஹாசன் தனலட்சுமி தைரியமாக இருந்தாக கூறி அவரை பாராட்டி இருந்தார். இதை சுட்டிக்காட்டிய ஒரு நெட்டிசன்ஸ், அன்னைக்கு கமல் சார் இந்த பொண்ணை பாராட்டி இருக்கக்கூடாது, என்னமாக ஹெட் வெயிட் காட்டுது. ஒரு டேஞ்சர் ஜோனில், இல்ல எலிமினேஷனில் வந்தாதான் இந்த பெண்ணு அடங்கும் என பதிவிட்டுள்ளார்.

வீட்டுக்கே அனுப்பலாம்

வீட்டுக்கே அனுப்பலாம்

மற்றொரு இணையவாசி, தனலட்சுமி, அசீம் எல்லாம நல்லா பேசுறாங்களோ இல்லையோ, ஆனால் ராம், கதிர் வீட்ல இருக்கிறதே தெரியாத மாதிரிதான் இருக்கு. பிக்பாஸ் வீட்ல இவங்க எதோ ஸேஃப் கேம் விளையாடுறாங்க, இவங்கள ஜெயிலுக்கு இல்ல, வீட்டுக்கே கூட அனுப்பிடலாம், நோ யூஸ் என பதிவிட்டுள்ளார்.

பா...வாயா.. இது

பா...வாயா.. இது

மற்றொரு இணையவாசி அசீமுக்கும் மகேஸ்வரிக்கும் நேற்று நடந்த சண்டையை சுட்டிக்காட்டி, இந்த சீசனின் காயத்ரி 2.0 வேறு யாரும் இல்லை இந்த மகேஸ்வரிதான். மைனா இவரின் அல்லக்கை...பா...வாயா.. இது என பதிவிட்டுள்ளார்.

ராமுடன் சண்டை

ராமுடன் சண்டை

அசீம் மற்றும் தனலட்சுமிக்கும் சண்டை ஆரம்பித்து இப்போது ராம் மற்றும் தனலட்சுமிக்கும் சண்டை ஆரம்பித்துள்ளது. உண்மையில் ராம் கண்ணை காரணம் காட்டி இரண்டு வாரமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒப்பேத்தி உள்ளார் என பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியில் போகவேண்டியவர்தான்

அவர் வெளியில் போகவேண்டியவர்தான்

ராம் வெளியில் அனுப்ப வேண்டிய போட்டியாளர் தான் ஏன் சும்மா சும்மா ஜெயிலுக்கு அனுப்பி, அவருடைய ஆர்மியை எரிச்சலாகுறீங்க பாத்துக்கோங்க என பதிவிட்டுள்ளார் என பதிவிட்டுள்ளார். ராம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னை விளம்பர படுத்துவதற்காக 2.5 லட்சம் கொடுத்துள்ளதாக பேசிய வீடியோ வெளியானதை கேட்டு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

சண்டைல கோல்ட் மெடல்

சண்டைல கோல்ட் மெடல்

மற்றொரு நெட்டிசன்ஸ், அப்புறம் என்னப்பா தனத்தை சரியான பஜாரின்னு அறிவிச்சிடலாமா? என்ன மூஞ்சிடா சாமி குழாய் சண்டைல கோல்ட் மெடல் வாங்கின மாதிரி என தனலட்மியை பங்கமாக கலாய்த்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X