மோசமான போட்டியாளர்..சும்மா சீன் போடுறாரு..முகத்திற்கு நேரா ராமை கலாய்த்த தனலட்சுமி!

சென்னை : டிஆர்பி டாஸ்கில் மோசமாக விளையாடியது ராம் தான் என தனலட்சுமி கூறியதால் வீட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த நான்கு வாரங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரசியம் கூடிக்கொண்டே இருக்கிறது.

முதல் வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் வெளியேற்றப்படாத நிலையில் இரண்டாவது வாரத்தில் ஜிபி முத்து தானாக வெளியேறினார். அடுத்ததாக குறைந்த வாக்குகளை பெற்று சாந்தி வெளியேறினார். கடந்த வாரம் அசல் கோலார் வெளியேற்றப்பட்டார்.

மகேஸ்வரி மோசமாக விளையாடினார்

மகேஸ்வரி மோசமாக விளையாடினார்

இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், டிஆர்பி டாக்கில் மிகவும் மோசமாக விளையாடிய போட்டியாளர் யார் என்று தேர்வு செய்து கூறுமாறு பிக் பாஸ் கூறுகிறார் அதற்கு அசீம் மகேஸ்வரி தான் மோசமாக விளையாடினார் என்கிறார். இதையடுத்து, ஏடிகே தனலட்சுமி பெயர் சொல்லி,அவர் தான் சுயநலத்தோடு விளையாடியது போல இருந்தது என்றார்.

ஜெயிலுக்கு போகும் ராம்

ஜெயிலுக்கு போகும் ராம்

இதையடுத்து, வரும் தனலட்சுமி, டீமில் வேலையே செய்யாமல் இருந்தது ராம் தான், எந்த வேலை சொன்னாலும், உடனே கண் பிரச்சனையை காரணமா சொல்வது போல எனக்கு தெரிகிறது என்றார். இதனால், கடுப்பான ராம், ரீசன் என்னவோ அதை தெளிவாக சொல்லிட்டுபோ, தேவையே இல்லாமல் என் கண்ணுவிஷயத்தை பத்தி பேசாதே என்கிறார். மேலும், டாஸ்கில் வோஸ்டா செயல்பட்ட ராம் ஜெயிலுக்கு போவார் என்று பிக் பாஸ் கூறுகிறார்.

ராம்,ஜனனி சிறைக்கு போனார்கள்

ராம்,ஜனனி சிறைக்கு போனார்கள்

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த முதல் வாரத்திலேயே ராம் ஜெயிலுக்கு போனார். அடுத்ததாக ரேங்க் டாஸ்க்கின் போது அசீம், அயீஷா, விக்ரமனுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, இந்த ரேங்க் வரிசையில் நிற்க ஆயிஷா, விக்ரமனுக்கு தகுதியே இல்லை என்று தொடங்கி, பின் நீ, வா,போ என்று ஆரம்பித்து இறுதியில் வாடா..போடா என்று முடிந்தது. இந்த டாஸ்கில் எதுவுமே செய்யாமல் அமைதியாக இருந்த ராம் மற்றும் ஜனனி சிறையில் அடிக்கப்பட்டனர்.

ராம் பலமுறை சிறைக்கு போனார்

ராம் பலமுறை சிறைக்கு போனார்

இதையடுத்து, இந்த வாரமும் மோசமாக விளையாடியதற்காக ராம் சிறைக்கு அனுப்பப்படுகிறார். இந்த பிக் பாஸ் சீசன் 6ல் அதிக முறை சிறைக்கு சென்ற ஒரே நபர் ராம் தான். கடந்த சீசனில், பாதாள சிறை இருந்த போதும் அது அவ்வளவாக பயன்படுத்தாமல் தான் இருந்தது.ஆனால், இந்த முறை அடிக்கடி போட்டியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X