ஜிபி முத்து நாரதர் வேலை பாக்குறாரு..அவர பாத்தாலே கண்டாகுது..பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ!

சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகிவுள்ளது.

பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு போட்டியாளரையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் கமல்.

ஜி.பி.முத்து, அசல் கோளார், ராபர்ட் மாஸ்டர், ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், அஸீம்,ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், ரச்சிதா, ராம் ராமசாமி, தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, தனலட்சுமி, விக்ரமன் என 20 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ்தொடங்கி 3 நாட்கள் ஆகி உள்ள நிலையில்,போட்டியாளர்கள் கிச்சன் டீம், கிளினிங் டீம், வாஷிங் டீம், பாத்ரூம் டீம் என ஒவ்வொரு டீமுக்கும் போட்டி வைத்து அந்த டீமின் போட்டியாளர்களை தேர்வு செய்தனர். இதில் கிச்சன் டீமின் தலைவராக திருநங்கை ஷிவின் கணேஷன் இருக்கிறார். இந்த முறை ஒவ்வொரு டீமுக்கும் பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம் என விதவிதமான கலர் கொடுக்கப்பட்டுள்ளது.

லூசு மாறி பேசாதீங்க

லூசு மாறி பேசாதீங்க

இதில்,காலையில் வெளியான இரண்டாவது ப்ரோமோவில் மகேஷ்வரியும் தனலட்சுமியும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். லூசு மாதிரி கேள்வி கேக்குறாங்க என்று மகேஷ்வரி கேட்டதுக்கு நீங்க லூசு மாறி பேசாதீங்க என்று முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு பதிலளிக்கிறாள் தனலட்சுமி. இதையடுத்து, ஏதாவது கேள்வி கேக்கனும் என்று கேள்வி கேட்டால் நான் எப்படி பதில் சொல்வேன் என்று மகேஷ்வரி கடுப்புடன் சொல்ல, நீங்க எப்ப வேண்டுமானாலும் செய்வதை திங்க முடியாது என்று தனலட்சுமி சொல்லுகிறார். நேற்று டீயில் ஆரம்பித்த சண்டை இன்று சாம்பாராக மாறியுள்ளது.

ஜிபி முத்து நாரதர் வேலை பாக்குறாரு

ஜிபி முத்து நாரதர் வேலை பாக்குறாரு

இதையடுத்து, தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது ப்ரோமோவில், தனலட்சுமி தெனாவட்டு பார்வையுடன் ஜிபி முத்துவை பார்த்தா காண்டாவுது, அவர் நாரதர் வேலையை பண்ணிட்டு டீமுக்கே அந்த பெயரை வாங்கிக் கொடுக்கிறார் என்று கேமிராவை பார்த்து சொல்லுகிறார். ஆனால், ஜிபி முத்துவோ எதை பற்றியும் எனக்கு கவலை இல்லப்பா என்பது போல தலையில் சிறிய ப்ளவர்வாசை வைத்துக்கொண்டு முந்திமுந்தி விநாயகரே பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார்.

போக போக சம்பவம் இருக்கு

போக போக சம்பவம் இருக்கு

நேற்றைய எபிசோடில் ஒரு பக்கம் ஜி.பி முத்துவினால் கலகலவென இருக்கும் வீடு மறுபக்கம் சாம்பாருக்கு சண்டை, ஆயிஷாவின் அழுகை, நாமினேஷன் என நிகழ்ச்சி கொஞ்சம் சூடுபிடித்துள்ளது. ஆரம்பமே இப்படி என்றால், இன்னும் போகப்போக வீடு எப்படி இருக்குமோ தெரியவில்லை பொருத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X