முதல் எலிமினேஷன் நீ தான்..ஜிபி முத்து ஆர்மியிடம் வசமாக சிக்கிய தனலட்சுமி!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோவில், தனலட்சுமி ஜிபி முத்துவை நாரதர் வேலை பார்ப்பதாக கூறியதை அடுத்து அவரது ரசிகர்கள் தனலட்சுமியை திட்டிதீர்த்து வருகின்றனர்.
காலையில் வெளியான இரண்டாவது ப்ரோமோவிலும் தனலட்சுமி மகேஷ்வரியிடம் எடக்குமடக்கான கேள்வி கேட்டு அவரிடம் சண்டை போட்டார்.
இதையடுத்து, ஜிபி முத்துவை பார்த்தா காண்டாவுது, அவர் நாரதர் வேலையை பண்ணிட்டு டீமுக்கே அந்த பெயரை வாங்கிக் கொடுக்கிறார் என்று கேமிராவை பார்த்து சொல்லி இருக்கிறார்.அதுமட்டும் இல்லாமல், தலைக்கணம் தலைக்கு ஏறியது போல, ஒவ்வொரு போட்டியாளர்களையும் அவர் ஏற இறங்க பார்ப்பது நமக்கே கொஞ்சம் கடுப்பாகத்தான் இருக்கிறது.

முதல் எலிமினேஷன் நீ தான்
முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ஜிபிமுத்துக்கு என்றே தனி ஆர்மி இருக்கும் போது தனலட்சுமி இப்படி சொன்னதால் கடுப்பான ரசிகர் ஒருவர், தனலட்சுமி உனக்கு தெரியலையா? ஜிபி முத்து பின்னால பெரிய ஆர்மியே இருக்கு? கேமரால வந்து பதிவு பண்ணிட்ட. நீ எலிமினேஷனுக்கு வராம பார்த்துக்கோங்கோ என பதிவிட்டுள்ளார்.

என்ன தனலட்சுமி மேடம்
தனலக்ஷ்மி மேடம் உங்களை பார்த்தா கூட தான் காண்டா இருக்கு, ஓவரா அட்டிட்யூட் காமிக்கிறீங்க கேம விளையாடுங்க மேடம். ஜிபி முத்துக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க. இந்த வீட்டில் இருப்பவர்கள் மிளகாய் அரைச்சிடுவாங்க என ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.

முதல் நாமினேஷன்
திமிராக தனலட்சுமி பேசியதை பார்த்து கடுப்பான ஒரு இணையவாசி, தனலட்சுமிக்கு ஒரு பாயசம் போட்ற வேண்டியது தான்...நீ மட்டும் நாமினேஷன் வந்த முதல் நீ தான் முதலில் வெளியில போவ..வெளியே வந்த பிறகு தனலட்சுமி நீ... அவ்வளவுதான் என்பது போல பதிவிட்டுள்ளார்.

நீங்கதான் நாரதர்
நீங்க தான் மேடம் இப்போ கேமரா கிட்ட ஜிபி முத்துவை பத்தி போட்டு கொடுத்து நாரதர் வேலை பார்த்துட்டு இருக்கீங்க என ஒரு இணையவாசி பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்து அனைவர் இடத்திலும் கலகலப்பாக பேசி வருகிறார். அவரும் அமுதவாணனும் அடிக்கும் காமெடி சற்று கடுப்பாகத்தான் இருக்கிறது. அமுதவாணன் பேசாமல் இருந்தால் போதும் என்று தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications











