யதார்த்தமா இருந்தீங்க..வீடு மகிழ்ச்சியா இருக்க நீங்கதான் காரணம்..ஜிபி முத்துவைகொண்டாடிய ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், மொத்த ஹவுஸ்மேட்டுகளும் ஜிபி முத்துவை கொண்டாடி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிக் பாஸ், வழக்கத்திற்கு மாறாக முதல் நாளில் இருந்தே சண்டை சச்சரவுகள் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் பிக் பாஸ் சீசன் 6ல் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. 24 மணி நேரம் பார்த்து பார்த்து கடுப்பான பிக் பாஸ் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடங்கியது முதலே டீ காஃபிக்கு சண்டை நடைபெற்று வருகிறது. இதில் விஷபாட்டிலாக உள்ளார் தனலட்சுமி. இதையடுத்து, நேற்று மதியம் சாரி கேட்டதுக்கு என்னை பார்த்து மொறைக்குறாங்க என ஜி.பி முத்து சொல்ல, திரும்பி பார்த்தா அது மொறைக்குறதா? இது எல்லாம் உங்களுக்கு. நடிக்காதீங்க நீங்க, என்ன எகிறிட்டு வரீங்க.. என தனலட்சுமி சண்டை போடும் பாணியில் கேட்டார். கோவபட்ட ஜி.பி நான் நடிக்கிறனா என அழுது புலம்பினார் ஜி.பி முத்து.

இரண்டாவது ப்ரோமோ
இதையடுத்து இரண்டாவது ப்ரோமோ, ஒரே வயசுக்காரர்களாக எடுப்பதற்கு இது ரீல்ஸ் கிடையாது என ஜனனி கூறுவதற்கு, தனலட்சுமி உள்ளிட்டோர் பிரச்சினை செய்வது போல் ப்ரமோவில், ஜிபி முத்துவிற்கு ஆதரவாக பேசிய ஜனனிக்கு பிக்பாஸ் வீட்டில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவர் பலதரப்பட்ட வயதில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் உள்ளதாகவும், ஒரே வயதிலானவர்கள் இருக்க இதுஒன்றும் ரீல்ஸ் இல்லை என்றும் முன்னதாக கூறியிருந்தார்.

நல்ல மனுஷன்
இதில் கிளப் ஹவுஸ் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்ட 2 போட்டியாளர்களை தேர்வு செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதன்படி சாந்தி மற்றும் ஜிபி முத்து ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டார்கள். இதில் ஜிபி முத்துவை மொத்த போட்டியாளர்களும் யதார்த்தமா இருந்தீங்க...இந்த வீட்டை வீடா மட்டும் தான் பார்த்தீங்க...டாஸ்க்கா பார்க்கல...நீங்க இந்த வீட்டில் இருப்பதால் தான் இந்த வீடு அழகான இருக்க என்றார்.

வலுவான போட்டியாளர்
அதே போல சாந்தியும் சமையல் அறையில் இருந்து கொண்டு அனைவருக்கும் அன்பாக சமைத்துக்கொடுத்தார் என கூறினர். இதைக்கேட்ட ஜிபி முத்து, இந்த வெள்ளை வேட்டி கட்டுனதுக்கு ஒரு மதிப்பு கிடைச்சிருக்கு என மகிழ்ச்சியாக கூறியிருந்தார். ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டின் வலுவான போட்டியாளர்களாக உள்ளார்.


Click it and Unblock the Notifications











