சீன் போடாத அடங்கு... கேப்டன் பாணியில் அசீமை தூக்கியடித்த ஏடிகே: ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதேநேரம் இந்த வாரம் விளையாடப்படும் சொர்க்கவாசிகள், நரகவாசிகள் டாஸ்க் அதன் இறுதிப் பகுதியை எட்டியுள்ளது.
இந்நிலையில், இன்றைய தினத்துக்கான 2வது ப்ரோமோவில் அசீம் - ஏடிகே இடையேயான சண்டை ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பிக் பாஸ் 67வது நாள்

பிக் பாஸ் 67வது நாள்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே அக்டோபர் 9ம் தேதி தொடங்கியது. முதலில் 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், மைனா வைல்ட் கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார். அதேநேரம் ஜிபி முத்து அவரது சொந்த விருப்பத்தின் பேரில் வெளியேறினார். அதன்பின்னர் இதுவரை மொத்தமாக 10 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சன் ஆகியுள்ளனர். இந்நிலையில், 67வது தினமான இன்று பிக் பாஸ் வீட்டில் அசீம் - ஏடிகே இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

 பிக் பாஸ் 2வது ப்ரோமோ

பிக் பாஸ் 2வது ப்ரோமோ

பிக் பாஸ் சீசன் 6ல் 67வது நாளுக்கான 2வது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், அசீம் - ஏடிகே தான் ப்ரோமோ கண்டெண்ட்டாக கலக்கியுள்ளனர். சொர்க்கவாசிகள், நரகவாசிகள் டாஸ்க்கில் ஸ்வாப்பிங் நடைபெறுகிறது. அதில், சொர்க்கத்தில் இருக்கும் ஏடிகேவை நரகத்திற்கு அழைக்கலாம் என அசீமும், ஷிவினும் முடிவு செய்கின்றனர். இதுதான் இன்றைய தினத்தின் முதல் ப்ரோமோவில் இடம்பெற்றிருந்தது. ஏடிகேவுக்கு எமோஷனல் ஸ்டெபிலிட்டி இல்லை என அசீமும் ஷிவினும் கூற, அதனை ஏற்ற்க்கொள்ளாத ஏடிகே, அசீமுடன் சண்டையிடுகிறார்.

 சீன் போடாத அசீம் - சீண்டிய ஏடிகே

சீன் போடாத அசீம் - சீண்டிய ஏடிகே

அப்போது ஏடிகே சொன்னதை கேட்டு அசீம் சிரித்ததால், கடுப்பான ஏடிகே, "சிரித்தால் அசிங்கமா கேள்வி கேட்பேன்" என சீறினார். இதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவிலும் அசீம் - ஏடிகே சண்டை உச்சமடைந்துள்ளது. "நீ எப்படி என்னை அசீங்கமா கேப்பன்னு சொல்லுவ" என ஏடிகேவிடம் எகிறுகிறார் அசீம். அதற்கு "இப்படி ஒரு பாயிண்ட் பிடிச்சி, இதுக்கு சீன் போடுவார் அசீம்" என ஏடிகே கூறுகிறார். இதனால் மீண்டும் அசீமும் ஏடிகேவும் ஒருவரையொருவர் வார்த்தை தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.

 ஏடிகே முடிவு செஞ்சுட்டார் போல?

ஏடிகே முடிவு செஞ்சுட்டார் போல?

அசீம் சீன் போட்டால் எப்படி இருக்கும் என தன் வாயாலே ஒரு பிஜிஎம் போட்டு அவரை ட்ரோல் செய்தார் ஏடிகே. இது ஹவுஸ்மேட்ஸ் உட்பட பிக்பாஸ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் எவிக்சன் நாமினேஷனில் ஏடிகே தான் டாப்பில் உள்ளார். அவருக்கு குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது. இதனால், இந்த வாரம் வெளியேற வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்துவிட்ட ஏடிகே, அசீமை வச்சு செய்துவிட்டு போய்விடலாம் என முடிவு செய்துவிட்டார் என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X