twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக் பாஸ் டைட்டில் தான் அவரோட டார்க்கெட்... உண்மையை சொன்ன ஷிவின்... ஒப்புக்கொண்ட அசீம்!

    |

    சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 68வது நாளை எட்டியுள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த சொர்க்கவாசிகள், நரகவாசிகள் டாஸ்க் முடிந்து இன்று ரிசல்ட் அறிவிக்கப்படுகிறது. அதில், இந்த வாரத்துக்கான இரண்டு பெஸ்ட் பிளேயர்கள் யார் என ஹவுஸ்மேட்ஸ் தீர்ப்பளித்துள்ளனர்.

     எல்லாரையும் நம்பி நம்பி ஏமாந்துட்டேன்... மகனை நினைத்து கண்கலங்கிய பிக் பாஸ் போட்டியாளர் எல்லாரையும் நம்பி நம்பி ஏமாந்துட்டேன்... மகனை நினைத்து கண்கலங்கிய பிக் பாஸ் போட்டியாளர்

     பிக் பாஸ் 68வது நாள்

    பிக் பாஸ் 68வது நாள்

    பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, இன்று 68வது நாளை எட்டியுள்ளது. மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் இருந்து இதுவரை 10 பேர் வெளியேறிவிட்டனர். மீதமிருக்கும் 11 போட்டியாளர்களும் இந்த வாரம் சொர்க்கவாசிகள், நரகவாசிகள் என்ற டாஸ்க்கை விளையாடினர். இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் வழக்கம்போல சண்டைகளுக்கும் சச்சரவுகளுக்கும் பஞ்சமே இல்லை.

     பிக் பாஸ் முதல் ப்ரோமோ

    பிக் பாஸ் முதல் ப்ரோமோ

    இந்நிலையில் இன்றைய தினத்துக்கான முதல் ப்ரோமோவில் நாமினேஷன் ஃபிரீ ஷோன் செல்பவர்கள் பற்றி முடிவுகள் வந்தது. அதில், மணிகண்டன், ஜனனி, அமுதவாணன், ஏடிகே ஆகியோர் செலக்ட் ஆனார்கள். ஆனால், அதிகம் எதிர்பார்ப்பில் இருந்த தனலட்சுமிக்கு இந்த தீர்ப்பில் ஏமாற்றமே கிடைத்துள்ளது. இதுபற்றி கேமரா முன்னால் இருந்து தனியாக புலம்பித் தீர்த்தார். இங்கே எல்லாரும் அவங்கவங்க நண்பர்களுக்கு பேவரிசம் செய்வதாக மனதுக்குள் பேசிக்கொண்டார். இதனையடுத்து தற்போது இன்றைய தினத்தின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

     இந்த வாரம் பெஸ்ட் யார்?

    இந்த வாரம் பெஸ்ட் யார்?

    2வது ப்ரோமோவில் இந்த வார டாஸ்க்கில் சிறப்பாக விளையாடிய போட்டியாளர்கள் இருவரை ஹவுஸ்மேட்ஸ்கள் தேர்வுசெய்யும் படி பிக் பாஸ் உத்தரவிடுகிறார். அதில் அமுதவாணன், அசீம் இருவரும் தேர்வாகியுள்ளனர். மைனா நந்தினி, ரச்சிதா, தனலட்சுமி, ஷிவின் உட்பட மற்ற போட்டியாளர்களின் வாக்கெடுப்பின் படி, அசீமும் அமுதவாணனும் இந்த வார சிறந்த போட்டியாளர்களாக தேர்வாகினர். இந்த வாரம் மட்டுமே அதிகம் சர்ச்சை இல்லாமல் சிறந்த போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளதாக தெரிவதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

     அசீம் டார்க்கெட் இதுதான்

    அசீம் டார்க்கெட் இதுதான்

    இந்த ப்ரோமோவில் அசீமை சிறந்த போட்டியாளர் எனக் கூறும் ஷிவின், எப்போதுமே டாஸ்க்கை மட்டுமே மனதில் வைக்காமல் இறுதி நாளில் டைட்டில் வின்னர் யார் என்ற இலக்கை நோக்கியே அவர் விளையாடுவதாகக் கூறுகிறார். இதனைக் கேட்ட அசீம், அதுதான் உண்மை என்பதைப் போல கைதட்டி ஒப்புக்கொள்கிறார். ஷிவின் சொன்ன உண்மையை அசீம் அப்படியே ஏற்றுக்கொண்டதும் ரசிகர்களின் பார்வையில் சிக்கியுள்ளது. அதேபோல் தனலட்சுமியும் அசீம் பற்றி இதே கருத்தில் பேசியிருந்தது வைரலாகி வருகிறது.

    English summary
    Bigg Boss hosted by Kamal Haasan is approaching its 68th day. In this case, the second promo for the 68th day has been released now. Both Azeem and Amudhavanan have been selected as the best contestant in this week's task.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X