பாவம் நம்மவர்.. கடைசியில் கமல் தான் வெளியே போவார் போல..கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6ன் வெற்றியாளர் ஜிபி முத்துதான் என ரசிகர்கள் இப்போதே ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
பிக் பாஸ் சீசன் 6ன் அனைவரின் மனம் கவர்ந்த போட்டியாளராக ஜிபி முத்து வருகிறார். அவர் பேசும் விதமும், வெகுளித்தனமும் அனைவருக்கும் பிடித்துப்போனதால், அவருக்கு ரசிகர்கள் ஆர்மியை தொடங்கி அவரின் வீடியோக்களை டிராண்டாக்கி வருகின்றனர்.
தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள், பாவம் நம்மவர் என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 6
கடந்த வாரம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கமல் கலந்து கொண்டு பேசினார். அதில், ஜிபி முத்துவிடம் மீண்டும் ஆதாம் பற்றி பேசினார். ஜிபி முத்து சார் பாதாம் தெரிகிறது ஆதாம் தெரியாதுன்னு சொல்லிட்டீங்களே என்றார். இதற்கு ஜிபி முத்து அதாமா? அவரு எங்க இருக்காரு என கேட்டு அனைவரையும் சிரிக்க வைத்தார். கடந்தவாரம் ஜிபி முத்து ஆதாமா அது யாரு என கேட்டது டிரெண்டான நிலையில், மீண்டும் அதை வைரலாக்க விஜய்டிவி இப்படி ஒரு ஸ்கிரிப்டை தயாரித்துள்ளது.

நயன்தாரா பிடிக்கும்
இந்நிலையில்,பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதிலும், ஜிபி முத்து தான் பிரதானமாக இருக்கிறார். ஜிபி முத்து ஆரம்பத்தில் இருந்து கேட்டுவந்த முருங்கைக்காய் அவருக்கு பரிசாக கொடுக்கப்படுகிறது. மேலும், ஜிபி முத்துவுக்கு பிடித்த கதாநாயகி யார் என கேட்க நயன்தாரா, சிம்ரன் பிடிக்கும் என்கிறார். அடுத்ததாக, பிக்பாஸ் வீட்டில் இருக்கும் யாருடன் ஹீரோயினாக நடிக்க ஆசை என கேட்க முழிக்கிறார் ஜிபி முத்து.

வெற்றியாளர் ஜிபிமுத்து தான்
இரண்டாவது ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர், ஜிபி முத்துவை மையப்படுத்தி தான் சீசன் 6 என்பதை விஜய் தொலைக்காட்சி நன்றாக புரிந்து கொண்டது...லீக் ஆட்டங்கங்களில் தோற்று இறுதிசுற்றுக்கான தகுதியை CSK அணி இழந்தால் எப்படி ஆட்டத்தின் விறுவிறுப்பு குறையுமோ அதுபோல ஜிபி முத்து இருக்கும் வரை குறைவிருக்காது என பதிவிட்டுள்ளார்.

தலைவன வச்சித்தான் நிகழ்ச்சியா?
மற்றொரு இணையவாசி டேய்... எங்க தலைவனா வச்சு தான் பிக்பாஸ் நிகழ்ச்சியே ஓடிடு இருக்காங்கா.. இதனால், அவரையே வின்னராக்கிடுங்க... எங்க தலைய எதும் சொல்லகூடாதுனு கமலிடம் சொல்லுங்க..என கமலுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் அவருக்கு இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

பாவம் நம்மவர்...
எதுக்கு சும்மா ஜிபி முத்து வச்சியே காமெடி பண்ணிட்டு இருக்காங்க வேற ஏதாச்சு புதுசா டிரை பண்ணுங்க...என்றும், பாவம் நம்மவர்... இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் தான் வெளியே போவார் போல ரசிகர்கள் கருத்துக்களை இணையத்தில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











