விக்ரமன் ஷோவில் இல்லாமலே இருந்திருக்கலாம்..முகத்திற்கு நேர் சொன்ன அமுதவாணன்..2வது ப்ரோமோ இதோ!

சென்னை : விக்ரமன் இந்த நிகழ்ச்சிக்கு வராமலே இருந்து இருக்கலாம் என அமுதவாணன் பேசி உள்ள ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த வாரம் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பமே சண்டை,அழுகை என பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

ஜிபி முத்து ஆர்மி, ஜனனி ஆர்மி, ரச்சிதா ஆர்மி,ஆயிஷா ஆர்மி என ரசிகர்கள் தாங்கள் விரும்பும் பிரபலங்களை டிராண்டாக்கி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில்

பிக் பாஸ் வீட்டில்

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள், 100 நாட்கள் மக்களின் மனதில் இடம் பிடித்து, சண்டை, சச்சரவுகளை மறந்து வீட்டில் இருப்பவர்களுடன் எப்படி பழகுகிறார்கள் என்பதை அங்கே இருக்கும் கேமிரா மட்டும் இல்லாமல், வெளியில் இருக்கும் மக்களும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில், மக்கள் விரும்பும் போட்டியாளரே டைட்டில் வின்னராக வருவார்.

4 பேர் நாமினேஷனில்

4 பேர் நாமினேஷனில்

கடந்த வாரம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி 6 நாட்கள் முடிவடைந்துள்ளது. இதிலும்,டீக்கு சண்டை,சாம்பாருக்கு சண்டை என பல சண்டைகள் வந்தன. இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் தனலட்சுமி, மகேஷ்வரி, அசீம், ராம் ராமசாமி ஆகியோர் இருக்கின்றனர். இந்த வாரம் எலிமினேஷன் இருக்கா இல்லையா என தெரியாது. இதனால், இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று தெரியவில்லை.

ஷோவில் இல்லாமல் இருந்து இருக்கலாம்

ஷோவில் இல்லாமல் இருந்து இருக்கலாம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், இப்படி ஒரு நபர் இந்த ஷோவில் இல்லாமலே இருந்து இருக்கலாம் என்று யாரை நினைக்கிறீர்கள் என கமல் கேட்க, அமுதவாணன் விக்ரமன் இல்லாமலே இருந்து இருக்கலாம், சரி என்று தெரிந்தாலும், மீண்டும் அதைப்பற்றியே பேசுவார் என்றார். இதையடுத்து, ரச்சிதா மகாலட்சுமி தனலட்சுமிக்கு சிவப்பு கொடியை கொடுத்து, இவர் இல்லாமல் இருந்து இருக்கலாம், அனைவரிடத்திலும் இன்னும் நீங்கள் அதிகமாக பேசவேண்டும் என்றார்.

சண்டை மூட்டிவிட்ட கமல்

சண்டை மூட்டிவிட்ட கமல்

இல்லாமலே இருந்தா நல்ல இருக்கும் என்பதற்கு பதிலா இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றீங்களா என கமல் கேட்கிறார். இதையடுத்து, ஜனனியும் தனலட்சுமிக்கு சிவப்பு கொடியை கொடுத்து யாரிடத்திலும் அதிகம் பேசாமல், மற்றவர்களுடைய தொடர்பை பெரிதாக விரும்பாமல் இருக்கிறார் என்றார். இதனால், தனலட்சுமியின் முகம் வாடிப்போனது. பிக் பாஸ் வீட்டிற்குள் கமல் சண்டை வரும் அளவுக்கு ஒரு கேள்வியை கேட்டு பிரச்சனையை கொளுத்தி போட்டுள்ளார்.

ஜிபி முத்து அலப்பறை

ஜிபி முத்து அலப்பறை

முன்னதாக காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், நயன்தாரா, சிம்ரனுடன் நடிக்க ஆசை என ஜிபி முத்து கூற என்னுடைய வேலைக்கே வேட்டு வைக்க பார்க்குறீர்களே என்று கமல் கிண்டலாக கூறுகிறார். அதே போல் வீட்டிற்குள் இருக்கும் இருவரை ஹீரோயினாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கமல் கேட்க, ஜி.பி. முத்து மௌனமாக இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X