முதல் நாமினேஷன்..ரச்சிதாவுக்கு இன்னொரு முகம் இருக்கு.. புகார்களை அடுக்கிய நெட்டிசன்ஸ்!

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் யார் வெளியேற போகிறார்கள். எந்த போட்டியாளர் யாரை நாமினேஷன் செய்யப்போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

நாமினேஷன் ரவுண்டில் தான் போட்டியாளர்களின் இன்னொரு முகம் தெரியும். அந்த வகையில் தற்போது முதல் வார ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிஷன்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நாமினேஷன் ப்ராசஸ்

நாமினேஷன் ப்ராசஸ்

தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில், இந்த சீசனுக்கான முதல் நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கி உள்ளது. அதில் ஆயிஷா விக்ரமன் மற்றும் ஷிவினை நாமினேட் செய்கிறார். ராபர்ட் மாஸ்டரோ எதுக்கெடுத்தாலும் கத்தி கத்தி சாதிப்பதாக ஆயிஷா பெயரை கூறுகிறார். இதேபோல் தினேஷ் சாந்தி பெயரையும்,ஜிபி முத்து குயின்ஸி பெயரையும் தெரிவிக்கிறார்கள்.

வெளியேறப்போவது யாரு

வெளியேறப்போவது யாரு

அதேசமயம் குயின்ஸி ரச்சிதா பெயரை சொல்லி அவருக்குன்னு இன்னொரு முகம் இருக்கு. அதை இன்னும் காட்டல மறைத்து வைத்திருப்பதாக நினைக்கிறேன் என்று அவரை நாமினேட் செய்துள்ளார். அதேபோல ஜிபி முத்து குயின்ஸி பெயரை சொல்லி அவர் யாரிடமும் சகஜமாக பேசவில்லை என்றார். இதன்மூலம் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.

இன்னொரு முகம் இருக்கு

இன்னொரு முகம் இருக்கு

ரச்சிதாவை பற்ற குயின்ஸி சொன்னது முற்றிலும் உண்மையானது. ரச்சிதா ஜி.பி.முத்துவிடம் பழகுவதை பார்க்கும் போது, அவர் போலியாக நடிப்பதாகத்தான் எனக்கு தெரிகிறது என ஒரு ரசிகர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனை போல 'கடந்து வந்த பாதை' இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஓபன் நாமினேஷன் வரும் வாரங்களில் வெளிப்படையான நியமனங்களைப் பார்க்கலாம். ஓபன் நாமினேஷன் நடந்தால் தான் நல்லா இருக்கும், அப்போதுதான் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார்.

ராபர்ட் மாஸ்டர் இதெல்லாம் பிரச்சனையா?

ராபர்ட் மாஸ்டர் இதெல்லாம் பிரச்சனையா?

ராபர்ட் மாஸ்டர் என்ன சொல்ல வராரு.. சைலண்டா இருந்தாலும் தப்பு சத்தமாக பேசினாலும் தப்பா? அவங்க எந்த ஒரு இடத்துலயும் யாரையும் காயப்படுத்தவில்லை. சத்தமா பேசிருக்காங்க இதுல என்ன தப்பு இருக்குனு எனக்கு தெரியவில்லை என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X