கேப்டன் பதவிக்கான டாஸ்க்.. ஜால்ராக்கள் ஜனனியை ஜெயிக்க வெச்சிடுவாங்க போல..கடுப்பில் நெட்டிசன்ஸ்!

சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது ஒரு வாரத்தை கடந்துள்ளது. முதல் நாளிலேயே நான்கு குழுக்களாக பிரிந்து டாஸ்க்குகள் நடைபெற்றன.

பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தை எட்டி உள்ள நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் நிறை, குறைகளை கேட்டறிந்தார்.

தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

கேப்டன் டாஸ்க்

கேப்டன் டாஸ்க்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது ப்ரோமோவில், கேப்டன் பதவிக்கான போட்டி நடக்கிறது. கைப்பிடியுடன் கூடிய கடிகாரத்தில் அதிகமான நேரம் யார் தொங்கியபடி நிற்கிறார்களோ அவர்களே கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற டாஸ்க்குடன் ஜிபி முத்து, ஜனனி மற்றும் சாந்தி களமிறங்கி உள்ளனர்.

ஜால்ராக்கள்

ஜால்ராக்கள்

இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ், இந்த ஜால்ராக்கள் ஜி.பி.முத்துவை தோல்வியடையச் செய்து ஜனனியை வெற்றிபெற வைப்பார்கள் என்று தெரிகிறது. இந்த வாரமும் எந்த வேலையும் செய்யாமல் ஓபி அடித்துக்கொண்டே இருப்பார். கண்டிப்பாக ஜனனிக்கு எதிராக மைனா, அல்லது விக்ரமன் அல்லது ஷிவினுடன் சண்டை நிச்சயம் இருக்கும் என்றார்.

என்ன எனர்ஜிடா

என்ன எனர்ஜிடா

ஜிபி முத்துவின் தீவிர ரசிகர் ஒருவர், காலையில் காய்ச்சலில் இருந்து ட்ரிப்ஸ் ஏத்தி உடம்பு முடியாம படுத்திருந்த மனுசன் டாஸ்கின்னு வரும்போது மொத்த எனர்ஜியையும் குடுக்கிறாரு இந்த மனுஷன் தான் வெற்றிபெறவேண்டும் என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இவங்கதான் ஜெயிப்பாங்க போல

இவங்கதான் ஜெயிப்பாங்க போல

ஜனனி மற்றும் ஜிபி முத்து இருவரும் கடிகாரத்தில் தொங்கும் டாஸ்க் தரமாக உள்ளது. சக போட்டியாளர்கள் அவரை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ் ஒருவர், ஜி.பி.முத்து மற்றும் ஜனனி இருவருமே பலருக்குப் பிடித்தவர்கள்...டாப் 5ல் தான் இருப்பார்கள் போல, இவர்கள் ஜெயிக்க வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X