Don't Miss!
- Technology
Jio சிம் கார்ட்டை தூக்கி எறிந்த 20 லட்சம் பேர்.. அதுவும் ஒரே மாசத்துல.. காரணத்தை சொன்னா நம்புவீங்களா?
- Sports
ஓயாமல் குரல் கொடுத்த ரசிகர்கள்.. எம்.எஸ்.தோனி செய்த விஷயம்.. முதல் டி20ல் சுவாரஸ்ய சம்பவம்!
- News
இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஏன் சமஸ்கிருதம் இருக்கக்கூடாது? முன்னாள் தலைமை நீதிபதி பேச்சு!
- Automobiles
சுஸுகியும் கோதாவுல இறங்க போகுது... ஓலாவுக்கு மட்டுமல்ல ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் ஆப்பு உறுதி!
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
பிக் பாஸ் சீசன் 6: என்னது இந்த வாரம் டபுள் எவிக்சனா..? ஹிட் லிஸ்ட்டில் அசீம், மணிகண்டன்
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 2023 புத்தாண்டு கொண்டாட்டத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த வாரம் யார் எவிக்சன் என்ற கேள்விக்கான பதிலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதனிடையே இன்றைய தினத்துக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் மைனா நந்தினி, மணிகண்டன் இருவரும் ஹிட் லிஸ்ட்டில் இருக்க, கமல் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார்.
பிக் பாஸ் 6: ட்விஸ்ட்டா.. இல்லை டைட்டில் போச்சா.. சனிக்கிழமையே சேவ் ஆகாத விக்ரமன்.. என்ன ஆச்சு?

பிக் பாஸ் 12வது வாரம்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 84வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இதுவரை 12 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், இந்த வாரம் யார் எவிக்சன் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் ஹவுஸ்மேட்ஸ்களின் குடும்பத்தினர் வந்து சென்றனர். அப்போது போட்டியாளர்களுக்கு Freeze - Release என்ற டாஸ்க்கும் கொடுக்கப்பட்டது. இதனால் மூன்று நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் எந்த சண்டையும் இல்லாமல் ஜாலியாக சென்றது.

பொளக்கப்பட்ட அசீம், கதிர்
இந்நிலையில், நேற்றைய எபிசோடில் போட்டியாளர்கள் கூடுவிட்டு கூடு பாய்ந்து விளையாடினர். அதாவது ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரும், மற்றவர்களின் உடல்மொழியை ஏற்று அவர்களைப் போலவே போட்டியாளர்களின் கேள்விக்கு பதில் கூற வேண்டும். இதில், ஷிவினுக்கு அசீம் போட்டோ வந்தது. அதனால் அசீமின் பாடி லேங்குவேஜோடு போட்டியாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூறினார். அதில் அப்படியே அசீம் போல உருமாறிய ஷிவின், ஹவுஸ்மேட்ஸ்களின் கேள்விக்கு கோபமாக கத்தி பதில் சொன்னது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அதேபோல், கதிர் உடல் மொழியில் ஏடிகே பேசியதும் வயிறுகுலுங்க சிரிக்க வைத்தது.

எவிக்சன் கார்டுடன் கமல்
இதனிடையே நேற்று ஷிவின், கதிர், அமுதவாணன் ஆகியோர் சேவ் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து யாரெல்லாம் காப்பாற்றப்படுவார்கள், எந்தப் போட்டியாளர் வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதன்படி தற்போது வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோவில், எவிக்சன் கார்டுடன் உள்ளே வரும் கமல், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக் கூறுகிறார். அதன்பின்னர் எவிக்சன் ஹிட் லிஸ்ட்டில் இருக்கும் மைனா நந்தினி, மணிகண்டன், அசீம் மூவரையும் ஒன்றாக அமர சொல்கிறார் கமல்.

இரண்டு எவிக்சனா?
அவர்களிடமே இந்த வாரம் யார் எவிக்சன் ஆவார்கள் என்ற கேள்வியைக் கேட்க, வழக்கம் போல கொஞ்சமும் சீரியஸ்னஸ் இல்லாமல் மணிகண்டனும் மைனாவும் தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்கின்றனர். அதன் பின்னர் பேசும் அசீம், இன்னைக்கு நியூ இயர் என்பதால் எதாவது அதிசயம் நடக்குமா என எதிர்பார்ப்பதாகக் கூறுகிறார். அதற்கு பதிலளிக்கும் கமல்ஹாசன், அப்படியானால் இந்த வாரம் இரண்டு பேரை எவிக்சன் செய்துவிடலாமா, இது அதற்கான ஊக்கமா என கேட்க, அரங்கமே அமைதியாகிறது. இதனால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மணிகண்டன் கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.