இனிமேல் வச்சி செய்வேன்... ஷிவின், ரச்சிதாவிடம் சவால் விட்ட அசீம்... ஒன்லி பேச்சு மட்டும் தானா பாஸ்?

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 87வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது.

இதுவரை 13 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சன் ஆகிவிட்ட நிலையில், இந்த வாரம் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே டிக்கெட் டூ ஃபினாலே என்ற டாஸ்க் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த டாஸ்க்கில் வெற்றி பெறுபவர் நாமினேஷனில் சிக்காமல் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்.

 பிக் பாஸ் 87வது நாள்

பிக் பாஸ் 87வது நாள்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 87வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இதுவரை 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், இந்த வாரம் யார் எவிக்சன் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் போட்டியாளர், இனிமேல் நாமினேஷனில் சிக்காமல் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவுள்ளார். இதனால் போட்டியாளர்கள் கடுமையாக மோதி வருகின்றனர்.

 டைல்ஸ் போட்டியில் ஹவுஸ்மேட்ஸ்

டைல்ஸ் போட்டியில் ஹவுஸ்மேட்ஸ்

பிக் பாஸ் சீசன் 6 இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதால் போட்டிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த வாரம் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் கோல்டன் டிக்கெட் டாஸ்க் நடைபெறுகிறது. வார்த்தை மோதல், விவாதம், பிசிகல் டாஸ்க் என பலவிதங்களாக போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் ஒவ்வொன்றிலும் வெற்றிப் பெறும் போட்டியாளர்களுக்கு டைல்ஸ்கள் கொடுக்கப்படுகின்றன. அதனை வைத்து அவர்கள் இறுதிப் போட்டிக்கு சென்றுவிடலாம். அதன்படி இதுவரை மைனா, அமுதவாணன் இருவரும் முன்னிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

 87வது நாள் ப்ரோமோ

87வது நாள் ப்ரோமோ

இந்நிலையில், இன்றைய தினத்துக்கான முதல் ப்ரோமோவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ரச்சிதாவை கலாய்த்தனர். உப்புமா சாப்பிட கூப்பிட்டதால் தான் ரச்சிதாவை போட்டியாளர்கள் கலாய்த்ததாக தெரிகிறது. அதனையடுத்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஏடிகேவும் மைனா நந்தினியும் தனியாக சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அசீம் எல்லாத்தையுமே பெர்சனலாக எடுத்துக்கொள்கிறான், ஆனால் பேசும் போது அப்படி ஏதும் இல்லையென சமாளித்துவிடுவான் என ஏடிகே கூறுகிறார். அதேபோல் ரச்சிதாவும் பெர்சனலாக எடுத்துக்கொண்டு அதை ஷிவின் மூலமாக கொட்டி வருகிறார் என குற்றம் சாட்டுகிறார். இறுதியாக விக்ரமனை பற்றி பேசும் ஏடிகே, விக்ரமனை சுத்தமாக பிடிக்கல, அவர் எதுக்கெடுத்தாலும் குற்றம் சொல்லிட்டே இருக்கார். ஆனா ஷிவின் கிட்ட மட்டும் சிரிச்சி சிரிச்சு பேசுவதாக மைனாவிடம் புலம்புகிறார்.

 அசீம் விட்ட சவால்

அசீம் விட்ட சவால்

இதனையடுத்து தற்போது 87வது நாளுக்கான 3வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு சைக்கிள் ஓட்டும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அமுதவாணன் ஓட்டும் சைக்கிளின் முன்னால் அமர்ந்திருக்கும் அசீம் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகிறார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அசீம், ஒரே சைக்கிளில் இருக்கும் ஷிவின், ரச்சிதா இருவரையும் பார்த்து, "உங்களால் தான் எனக்கு இப்படி ஆச்சு, நான் ஒழுங்கா விளையாடிக் கொண்டிருந்தேன். இப்போ எனக்கு தான் பாதிப்பு. சொல்லிட்டு செய்றேன், அடுத்த கேம் உங்க ரெண்டு பேரையும் வச்சு செய்றேன்" என சவால் விடுகிறார். இதனால் ஷிவினும் ரச்சிதாவும் பேசமுடியாமல் திகைத்து நிற்கின்றனர். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அசீம் பேச்சு மட்டும் தான் பலமா இருக்கு, இந்த வாரம் டாஸ்க் எல்லாவற்றிலும் ஒழுங்காவே விளையாட முடியல என ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X