Don't Miss!
- News
பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது.. வேல்முருகன் ஆவேசம்!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா.. 9வது இடத்தை பிடித்தது
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
Safe Gameன்னு சொல்லி அசிங்கப்படுத்தாத... வாடா பாக்கலாம்...: அசீமிடம் எகிறிய ஏடிகே...
சென்னை:
பிக்
பாஸ்
சீசன்
6
நிகழ்ச்சியில்
இந்த
வாரம்
டிக்கெட்
டூ
பினாலே
டாஸ்க்
நடைபெறுகிறது.
இந்த
வாரம்
நடக்கும்
போட்டிகளில்
முதலிடம்
வரும்
ஒருவர்
நாமினேஷனில்
கலந்துகொள்ளாமல்
இறுதிச்
சுற்றுக்கு
தகுதி
பெறலாம்.
இதுவரை
13
போட்டியாளர்கள்
வெளியேறிவிட்ட
நிலையில்
மீதமிருக்கும்
8
பேரும்
இந்த
வார
டாஸ்க்கில்
கடுமையாக
விளையாடி
வருகின்றனர்.
அதேநேரம்
இந்த
வாரம்
அசீம்
தவிர
மற்ற
7
போட்டியாளர்களும்
எவிக்சன்
நாமினேஷனில்
இருப்பதால்
பிக்
பாஸ்
வீடே
ரணகளமாக
காட்சித்
தருகிறது.
இன்னொரு
வாட்டி
அதை
பண்ணீங்கனா..
வெளியே
அனுப்பிடுவேன்..
ஏடிகேவுக்கு
பிக்
பாஸ்
அதிரடி
வார்னிங்!

பிக் பாஸ் 13வது வாரம்
அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 13வது வாரத்தின் இறுதி பகுதிக்கு வந்துவிட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் இருந்து இதுவரை 13 பேர் வெளியேறிவிட்டனர். மீதமிருக்கும் எட்டு போட்டியாளர்களான அசீம், விக்ரமன், ஷிவின், கதிர், அமுதவாணன், ஏடிகே, ரச்சிதா, மைனா ஆகியோர் இந்த வாரம் போட்டியில் விளையாடி வருகின்றனர். இந்த வாரத்தின் முதல் நாளில் நடந்த நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்கில் அசீம் வெற்றிப் பெற்றார். பிக் பாஸிடம் ஒன்றரை மணி நேரமாக மொக்கைப் போட்டு இந்த வாரத்தின் எவிக்சனில் இருந்து தப்பினார்.

இந்த வாரம் எவிக்ஷன்
அதனைத் தொடர்ந்து இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் காரசாரமாக நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் போட்டியாளர் நாமினேஷனில் சிக்காமல் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவுள்ளார். இதனால் எட்டு பேரும் தீவிரமாக விளையாடி வருகின்றனர். இதில் அமுதவாணன், கதிர், ஏடிகே, மைனா நான்கு பேருக்கும் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. அதேநேரம் குறைவான ஓட்டுகள் அடிப்படையில் ஏடிகே இந்த வாரம் எவிக்சன் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் அமுதவாணன் குறைவான ஓட்டுகளை பெற்றிருந்தார். ஆனால் தற்போது நிலைமை ஏடிகேவுக்கு எதிராக மாறி வருகிறது.

இன்றைய தினத்துக்கான ப்ரோமோ
இந்நிலையில், 88வது நாளான இன்றைய தினத்துக்கான முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன. அதன் தொடர்ச்சியாக தற்போது மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. முதல் இரண்டு ப்ரோமோக்களிலும் அசீமின் கோபம் உச்சத்தில் இருந்தது. ரச்சிதாவும் ஷிவினும் குரூப்பிசம் செய்வதாக அசீம் கூறி வருகிறார். நேற்று நடந்த சைக்கிள் டாஸ்க்கில், அசீம் தான் இரண்டாவது ஆளாக அவுட் ஆனார். இதற்கு ஷிவினும் ரச்சிதாவும் தான் காரணம் என அவர்கள் மீது அதிருப்தியில் இருந்தார். இரண்டாவது ப்ரோமோவில் அடுத்த டாஸ்க்கில் இருவராக விளையாட வேண்டும் என பிக் பாஸ் கூற, அசீம் டீம் மேட் இல்லாமல் இருக்கிறார். அவர் ஷிவினுடன் விளையாட விருப்பம் தெரிவிக்க, அவரோ ரச்சிதாவை செலக்ட் செய்கிறார்.

மூன்றாவது ப்ரோமோ
இதனால் டென்ஷனான அசீம், ஷிவின் - ரச்சிதா Safe Game ஆடுவதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், தற்போது வந்த மூன்றாவது ப்ரோமோவிலும் அதே Safe Game பஞ்சாயத்து தான் நடக்கிறது. இந்த முறை அசீமுடன் சேர்ந்து விளையாட ஏடிகே விருப்பம் தெரிவிக்கிறார். ஆனால், ஏடிகேவின் உடல்நிலையை காரணம் காட்டி அசீம் மறுப்பதாக தெரிகிறது. இதனால் கோபமான ஏடிகே "நான் என்ன Safe Game விளையாடவா வந்துருக்கேன், வா சேர்ந்து விளையாடலாம்" என அழைக்கிறார். மேலும், "நீ மட்டும் தான் ஒழுங்கா விளையாடுறியா? எப்பவும் Safe Game... Safe Game-ன்னு சொல்லி எல்லாரையும் அசிங்கப்படுத்துற மாதிரி இருக்கு மச்சான். நீ மட்டும் Safe Game விளையாடலையா என்ன, நான் நல்லா ஹெல்தியா தான் இருக்கேன்" எனக் கூறி எரிமலையாக வெடித்துச் சிதறுகிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், அசீம், ஏடிகே இருவருமே Safe Game தான் விளையாடுகிறார்கள் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.